தேர்தல் குற்றங்களை விசாரிக்கும் அதிகாரம் மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த்துக்கா அல்லது தேர்தல் ஆணையத்(இசி)துக்கா?
தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெர்சே இக்கேள்வியை எழுப்பியுள்ளது. பெர்சே 13வது பொதுத் தேர்தலின்போதும் அண்மைய சரவாக் மாநிலத் தேர்தலிலும் நிகழ்ந்த தேர்தல் குற்றங்களை இரண்டு ஆணையங்களிடமும் புகார் செய்ய முயன்றது.
ஆனால், இரண்டுமே புகார்களை ஏற்கத் தயாராக இல்லை.
“எம்ஏசிசி-இடம் சென்றால் (தேர்தல்கால) ஊழல்களை விசாரிக்கும் அதிகாரம் தனக்கில்லை என்கிறது”, என பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா தெரிவித்தார். அவர் இன்று பெட்டாலிங் ஜெயாவில் செய்தியாளர் கூட்டமொன்றில் பேசினார்.
பின்னர் பெர்சே, இசியிடம் புகார் செய்தது. அது தனக்கு அவ்விவகாரத்தில் அதிகாரம் இல்லை என்று கூறிவிட்டது.
“அப்படியென்றால் இப்புகார்களை விசாரிப்பது யார்?”, என்றவர் கேள்வி எழுப்பினார்.
அம்மா மரியா சின் அவர்களே– இப்போது தானா இதெல்லாம் தெரிந்தது?
எய்தவன் இருக்க அம்பை நோவுவது எதற்கு?
“அப்படியென்றால் இப்புகார்களை விசாரிப்பது யார்?”, ஒன்றும் கவலை படாதிங்க ! துன் காகா திமிர் கவனித்து கொள்வார் ! mother of all disaster !
ஐநா சபைக்கு கொண்டு செல்லுங்கள். ஒருவேளை அவர்கள் விசாரிக்க வாய்ப்புள்ளது.அதுவும் இல்லையென்றால் தமிழ்நாடு தேர்தல் அதிகாரி லக்கானியிடம் புகாரளியுங்கள் ஏதேனும் நடக்கிறதாவென்று பார்ப்போம்.வலுத்தவன் கை ஓங்கியே இருக்கும்.