ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் கொல்லப்பட்ட தம் கணவரின் கோலா கங்சார் நாடாளுமன்றத் தொகுதியில் பிஎன் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ள மஸ்தூரா முகம்மட் யாஸிட்டுக்கு எதிராகக் கீழறுப்பு வேலைகள் நடப்பதாக அரசல் புரசலாக பேசப்படுகிறது.
அம்னோவுக்குள்ளேயே மஸ்தூராவைக் கவிழ்ப்பதற்குச் சதி செய்யப்படுகிறதாம்.
ஆனால், அவரின் மூத்த மகன் வான் எமிர் அஸ்தார் வான் முகம்மட் கைரில் அனுவார் அதை மறுக்கிறார்.
மாறாக, ஜூன் 18 இடைத் தேர்தலில், தம் தாயாரின் வெற்றிக்காக அம்னோ தேர்தல் இயந்திரம் கடுமையாக பாடுபடுகிறது என்றார்.
அவரையும் மஸ்தூராவின் மற்ற பிள்ளைகளையும் பாதுகாக்க பாதுகாவலர்கள் அமர்த்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதையும் வான் அமிர் மறுத்தார்
.
“இதுவும் வெறும் புரளிதான். ….நாங்கள் மக்களுடன் கலக்கிறோம், எப்போதும்போல. மெய்க்காப்பாளர்கள் யாரும் கிடையாது”, என்றார்.
இவளும் ஆச்சிதேந்தந்தான் ஆகி மேலோகம் போக வாழ்த்துக்கள் மக்கள் கஷ்டபடுவதில் எவனுக்கும் அக்கறை இல்லை BN PAS இந்த இரண்டு கட்சிகளும் அழியணும் அன்று மலேசியா மக்கள் சிறப்பாக வாழ்வார்கள்