பினாங்கில் திடீர் தேர்தல் நடத்துவது பற்றி முதலமைச்சர் லிம் குவான் எங் பிகேஆர் தலைவர்களுக்கு இன்று விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிகேஆர் அதன் அரசியல் பிரிவுக் கூட்டத்தை இன்று அதன் பெட்டாலிங் ஜெயா தலைமையகத்தில் நடத்தவுள்ளது. அதில் லிம்மும் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.
லிம் கூட்டத்தில் கலந்து கொள்வதை பிகேஆர் தலைவர் ஒருவர் உறுதிப்படுத்தினர். ஆனால், மேல்விவரம் அளிக்க அவர் மறுத்து விட்டார்.