அபு காசிம்: ‘சதி’ புகார் குறித்து பேசாதீர் என்று வழக்குரைஞர் கூறினார்

 

AbuKassimமலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர் அபு காசிம் முகமட் பிரதமர் நஜிப் ரசாக்கையும் மலேசிய அரசாங்கத்தையும் வீழ்த்துவதற்காக உயர்மட்ட அளவில் சதி நடப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக எந்த ஓர் எதிர்வினையும் ஆற்றமாட்டார்.

“நான் எனது வழக்குரைஞனருடன் ஆலோசனை நடத்தினேன். அவர் என்னை பேசாமல் இருக்கும்படி கூறினார், ஏனென்றால் அது செயல்முறைக்கு சுலபமாக இருக்கும்”, என்று அபு காசிம் அவரின் பிரியாவிடை நிகழ்ச்சிக்குப் பின்னர் எம்எசிசி தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது கூறினார்.

அவர் மேற்கொண்டு எவ்வித விளக்கமும் தரவில்லை. அபு காசிம், பேங் நெகாரா கவர்னர் ஸெட்டி, முன்னாள் ஏஜி அப்துல் கனி பட்டேயில் ஆகியோருக்கு எதிராகப் புகார் செய்துள்ள அம்னோ இளைஞர் உதவித் தலைவர் கைருல் அஸ்வான் ஹருனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்படுவதும் அச்செயல்முறையில் அடங்குமா என்பது பற்றியும் அவர் எதுவும் கூறவில்லை.

ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு தொடர்ந்து அவசியமான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கு தமது பதவியை ஏற்றிருப்பவருக்கு ஊக்கமளிக்கும்படி 1000க்கு மேற்பட்ட எம்எசிசி அதிகாரிகளிடையே நிகழ்த்திய தமது இறுதி உரையில் அபு காசிம் கேட்டுக்கொண்டார்.