அம்னோ இளைஞர் பகுதி துணைத் தலைவர் கைருல் அஸ்வான் ஹருன் பிரதமரைக் கவிழ்க்கும் முயற்சி என்று கூறிக்கொண்டு அதன் தொடர்பில் செய்த போலீஸ் புகாருக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை என்று அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் கூறினார்.
அது கைருல் அஸ்வான் தனிப்பட்ட முறையில் செய்த போலீஸ் புகார் என்று கூறிய கைரி, அது அம்னோ இளைஞர் பகுதியின் நிலைப்பாடு அல்ல என்றார்.
“அதன்மீது விசாரணை நடத்தும் பொறுப்பை போலீசிடமே விட்டு விடுகிறோம். பிரதமரே கூறியதுபோல் அது தனிப்பட்ட முறையில் செய்யப்பட்ட போலீஸ் புகார்”, என கைரி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.