1எம்டிபி மீதான பிகேஆர் விளக்கக் கூட்டங்களில் முகைதின்

muh1எம்டிபி   ஊழலை   எளிய  மொழியில்   பொதுமக்களுக்கு  எடுத்துரைக்க   பிகேஆர்   நாடு   முழுக்க   ஏற்பாடு    செய்யும்  விளக்கக்   கூட்டத்தொடரில்   முன்னாள்   துணைப்   பிரதமர்  முகைதின்   யாசினும்  கலந்து  கொள்வார்.

பிகேஆர்   தலைவர்    டாக்டர்   வான்  அசிசா   வான்  இஸ்மாயிலுடன்   ஒரே  மேடையில்    காட்சியளித்த    முகைதின்,      நகர்புறங்களிலும்  புறநகர்   பகுதிகளிலும்    கவனம்    செலுத்தப்போவதாகக்   கூறினார்.

“1எம்டிபி      விவகாரத்தை   எளிய  மொழியில்   பரவலாக   எடுத்துச்  சொன்னால்    தவிர,   அதன்   தாக்கத்தையும்   நாட்டுக்கு   அதனால்    ஏற்படக்கூடிய    பாதிப்பையும்   மக்கள்  உணர   மாட்டார்கள்”,  என  முன்னாள்  பிரதமர்    கூறினார்.