அம்னோவிலிருந்து வெளியேறிய உறுப்பினர்களைச் சிறுமைப்படுத்திய உச்சமன்ற உறுப்பினர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ், அவர்களில் ஒருவரை “மனவெறுப்படைந்த டெக்சி ஓட்டுனர்” எனக் கிண்டல் செய்தார்.
நேற்று கேலாங் பாத்தா அம்னோ நிரந்தர அவைத் தலைவர் பஹாரோம் அப்துல் கனியும் கூலாய் அம்னோ துணைத் தலைவர் டோஸ்ரின் ஜர்வந்தியும் தத்தம் தொகுதிகளின் ஆண்டுக்கூட்டத்தில் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்ததை அடுத்து நஸ்ரி இவ்வாறு கூறினார்.
எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் ஆசை அவர்களுக்கு இருக்கிறது. அதனால்தான் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியில் சேரும் நோக்கத்தோடு அவர்கள் விலகியுள்ளனர்.
“அம்னோவிலிருந்தால் அவர்களால் போட்டியிட இயலாது. முகைதின் யாசின் நிச்சயம் அவர்களுக்கு இடம் கொடுப்பார்”, என நஸ்ரி கூறினார்.
மேலும், அடிநிலை உறுப்பினர்கள் விலகுவதால் அம்னோ பாதிப்படையாது என்றும் அவர் சொன்னார்.
இன்னும் கொஞ்சம் நாளில் மலேசியாவில் வேலை செய்யும் பங்களாதேஷ் இனத்தவர் அம்னோவில் சேரலாம் என்ற முடிவு வெளியிடும் நாட்கள் வெகு தூரம் இல்லை, அதன் காரணமாகவே மலேசியாவில் வேலை செய்வோர் மலை மொழி கண்டிப்பாக தெரிந்து இருக்கவேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கட்சியே ஒழிந்தாலும் தலைவர் ஒழிய மாட்டார் என்ற சித்தாந்தம் கொண்டது தற்கால அமீனோ. ஒழிவதற்கு வழிகோலுகின்றார் நஸ்ரி.
விரைவில்
MALAYSIA – BANGLASIA-யாகவும்
BUMIPUTRA – BANGLAPUTRA-வாகவும்
UMNO – BANGUMNO- வாகவும்
பெயர் மாற்றம் காண இருக்கும்போது, பங்களாதேசியாக அம்னோவில் உறுப்பினராவார்கள் என்பதில் நம்பிக்கை இல்லை
மனவெறுப்படைந்த டாக்சி ஓட்டுனர்’ என்ற கூற்று உங்களை போன்ற பணம் படைத்த தலைவர்களுக்கு அது கிண்டலாக தெரியும் ஆனால் உண்மையாக குடும்பதுக்காக உழைக்கும் ஒரு டாக்சி ஒடுனர் படும் துன்பம் உங்கள் குடும்பத்திற்கு ஒரு சபா கேடக விளையும் என்பதை மறந்து விட வேண்டாம். ஒவ்வோர் நாளும் வருமானத்திற்காக 12 முதல் 13 மணிவரை சுமார் வேலை செய்து கிடைக்கும் வருமானம் சுமார் RM150.00 வெள்ளி. டாக்சி நாள் வாடகை,செலவு, இன்னும் சில செலவுகள் வைத்தாள் ஒரு நாள் வருமானம் போதாது. இவரின் திமிர் பிடித பேச்சு டாக்சி ஒடுனர்களுக்கு மன வேதனை தந்து உள்ளது. உருப்படியான ஒரு நல்ல காரியத்தை செய்தால் உங்களுக்கு புண்ணியமாக அமையும். திமிர் பேச்சு வேண்டாம்.
நஸ்ரி அவர்களே…உங்க கருத்தை நான் வரவேற்கிறேன். இது போன்ற கருத்துக்களை நீங்களும் பிற உம்னோ கட்சியினரும் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் வரும் பொதுத் தேர்தலில் உம்னோ அரசு மண்ணைக் கவ்வும் சூழ்நிலை ஏற்படும்…
P.P. BERSATU MALAYSIA-வுக்கு சங்க பதிவகத்திலிருந்து அங்கீகாரம் கிடைத்ததிலிருந்து அம்னோ தலைவர்கள் அனைவரும் புலம்ப ஆரம்பித்து விட்டீர்கள். இப்படி புலம்பிதான் முன்பின் அறிமுகமில்லாத பல அரசு சாரா இயக்கங்களின் தலைவர்களை மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வசதியாக இலவச அறிமுக சேவையில் ஈடுபட்டு வெற்றியும் அடைந்தீர்கள். இப்போது புதிய கட்சியை மக்களிடத்தில் இலவசமாக விளம்பரபடுத்த நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.