அரசியல் அரங்கில் புதிய வரவாக பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா வந்திருந்தாலும் பொதுத் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட்டாலும் அடுத்த பொதுத் தேர்தலில் எல்லாத் தொகுதிகளிலும் நேரடிப் போட்டிதான் என்பதில் உறுதியாக இருக்கிறார் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி.
“நான் எப்போதுமே ஒரு நன்னம்பிக்கையாளன்”, என்றாரவர்.
நாட்டில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக விரிவான அக்கறையின் அடிப்படையில் கலந்து பேசி இதற்கு இணக்கம் காண முடியும் என்று அவர் சொன்னார்.
தொகுதி ஒதுக்கீடு குறித்து தொடக்கநிலை பேச்சுகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருவதாகக் கூறிய சிலாங்கூர் மந்திரி புசாருமான அஸ்மின், பிகேஆர் ‘எதற்கு ஆயத்தமாக’ உள்ளது என்றார்.
அடுத்த தேர்தலில் பாரிசன் 2.0 மகாதீர் கூட்டணி ஆட்சிக்கு வர்வதுதான் உனது நோக்கம். பக்கடானின் ஆரம்ப நோக்கம் மறக்கப்பட வேண்டியதுதான். மீண்டும் பாரிசன், நஜிப் மட்டும் இல்லா பாரிசன்.
சிலாங்கூர் மந்திரி பெசர் அஸ்மின் , எல்லாவற்றுக்கும் தயாராகவும் உறுதியாகவும் இருக்கிறார், இந்தியர்களுக்கு கொடுக்கவேண்டிய சலுகைகளை தவிர !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வழ வழ கொலா கொலா என்று பேசிக் கொண்டிருக்காமல் தேர்தலுக்கு நிலா கட்சியைத் தள்ளி வைத்து விட்டு கூட்டனி வைத்தால் உண்டு வாழ்வு. அதுவல்லாமல் குருட்டுக் கூட்டணிப் போட்டால் அடுத்த தேர்தலுக்குப் பின் நீதிக் கட்சி அம்போ!