பெர்சேக்கு போலீசில் ‘சிறப்புச் சலுகை’: ஜமால் குற்றச்சாட்டு

bersihசுங்கை   புசார்   அம்னோ    தொகுதித்    தலைவர்   ஜமால்   முகம்மட்  யூனுஸ்,    போலீசார்    பெர்சே   வாகன   அணி  பங்கேற்பாளர்களுக்கு   அதிகம்   சலுகை  கொடுக்கிறார்கள்  என்று  குறைகூறியுள்ளார்.

“நேற்றைய    நிகழ்வுகள்   போலீசார்   வழக்கத்துக்கு   மாறாக    பெர்சே  5-க்குச்  சிறப்புச்  சலுகை   கொடுப்பதைக்   காண்பிக்கின்றன.

“மறுபுறம் ,  சிகப்புச்   சட்டை   இயக்கத்தினரிடம்    அவர்கள்   நடந்து  கொண்ட  விதத்தைக்    கூற   வேண்டுமென்றால்,     நோய்  கண்ட   ஒரு    நாயிடம்    எப்படி   நடந்து   கொள்வார்களோ   அப்படித்தான்   நடந்து   கொண்டார்கள்”,  என்றவர்   ஓர்   அறிக்கையில்   கூறினார்.

பெர்சே     வாகன   அணிகள்   நவம்பர்   19இல்   நடத்தத்   திட்டமிடப்பட்டுள்ள   பேரணி   குறித்த    விழிப்புணர்வை   ஏற்படுத்துவதற்காக   நேற்று   மூன்றாம்    முறையாக   நாடு   முழுவதும்   அவற்றின்    பயணத்தைத்    தொடர்ந்தன.
பெர்சேயின்   ஆறு   வாகன   அணிகளுக்கும்     பல    இடங்களில்   சிகப்புச்   சட்டையினர்   குறுக்கிட்டு   தொல்லை   கொடுத்தனர்.  குறிப்பாக   சிலாங்கூர்   சாபாக்   பெர்ணாமில்   மஞ்சள்    நிறச்   சட்டை   அணிந்த   பெர்சே   பங்கேற்பாளர்களிடம்  சிகப்புச்    சட்டையினர்   மிகுந்த  வன்முறையுடன்   நடந்து  கொண்டார்கள்.