கிளந்தானை முன்மாதிரி இஸ்லாமிய மாநிலமாக்கும் முயற்சியில் பாஸ் தோற்றுப் போனதால்தான் அங்கு கடும் தண்டனைகளை விதிக்க புதிய சட்டங்களைக் கொண்டுவர விரும்புகிறது என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அஜீஸ் கூறினார்.
பாஸ் அதன் முயற்சியில் வெற்றி பெற்றிருந்தால் கடும் தண்டனைகளைக் கொடுக்கும் ஹுடுட் சட்டம் அதற்குத் தேவைப்படாது.
“பாஸால் கிளந்தானை இஸ்லாமிய மாநிலமாக மாற்ற முடியவில்லை. அதனால்தான் (குற்றங்களுக்கு) கடும் தண்டனைகளை வழங்க நினைக்கிறது.
“பாஸ் வெற்றி பெற்றிருந்தால், அம்மாநிலத்தில் அனைவரும் (ரமலான் மாதத்தில்) நோன்பு நோற்பார்கள். அதைக் கட்டாயப்படுத்த வேண்டிய அவசியம் இருந்திருக்காது. ஆக, கிளந்தானில் அவர்கள் தோற்றுப் போனார்கள்”, என்றாரவர்.
pas கட்சியை ஆதரிப்பது போல் அதே நேரத்தில் அதை கருவறுக்கும் திடடத்தையும் மிக கட்சிதமாக அரங்கேற்றுகிறது.umno .
…..உனக்கு ஆப்பு ரெடி! பார்ப்போம் அளவுக்கு மீறி துலற உனக்கு எமன் மக்கள்தான் தேர்தலில் தேடி உன்னை விளாசுவது என் முதல் குறிக்கோள்