நேற்று மெக்ஸிக்கோ பட்டாசு சந்தை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில குறைந்தது 29 பேர் பலியானதாகவும் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அது, மெக்சிகோ நகருக்கு 32கிலோ மீட்டர் தொலைவில் துல்டெபெக்கில் உள்ள சென் ப்பளிடோ சந்தையில் கடந்த பத்தாண்டுகளில் நிகழ்ந்துள்ள மூன்றாவது வெடிப்பாகும்.
வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக துல்டெபெக் ஆபத்து, அவசரச் சேவைகளின் தலைவர் இசிட்ரோ சன்செஸ் கூறினார்.