பிரதமரின் கும்பத்தினர் ஆண்டு-இறுதி விடுமுறையைக் கழிக்க அரசாங்க ஜெட் விமானத்தைப் பயன்படுத்துவதற்கு இது சரியான நேரமல்ல என்று எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நஜிப் ரசாக்கை குறைகூறியுள்ளனர்.
துணை உள்துறை அமைச்சர் நூர் ஜாஸ்லான் பிரதமர் நஜிப் அரசாங்க ஜெட் விமானத்தை பயன்படுத்துவதற்கான உரிமையைப் பெற்றிருக்கிறார் என்று நஜிப்பை தற்காத்து பேசியதற்கு எதிர்வினையாக தற்போதையப் பொருளாதார சூழ்நிலையில் ஆடம்பரமான சுற்றுப்பயணத்தில் நஜிப் ஈடுபடக்கூடது என்று பிகேஆர் உதவித் தலைவர் ரஃபிசிஸி ரமலி கூறினார்.
2017 ஆண்டுக்கான பட்ஜெட்டில் செலவினங்களைக் குறைக்கும் கொள்கையை நஜிப் ஏற்றுக்கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய ரஃபிஸி, ஜெட் விமானத்திற்கான செலவுதான் முதலில் வெட்டப்பட வேண்டியவைகளில் ஒன்று. பிரதமர் தொடர்ந்து தனிப்பட்ட ஜெட் விமானத்தைப் பயன்படுத்தக்கூடாது, அது உள்நாட்டு பயணமாக இருந்தாலும்கூட. இது அவருடைய கொள்கைக்கு எதிரானது என்றார்.
தமது கணிப்பின்படி, அரசாங்கம் அதன் ஐந்து ஜெட் விமானங்களை பயன்படுத்துவதற்கு ஆண்டொன்றுக்கு ரிம70 மில்லியன் செலவிட வேண்டியுள்ளது என்றாரவர்.
இது விளைவுகளைப் பற்றி பொருட்படுத்தாத செலவழிப்பு. இது மக்கள் படும் அவதியைப் பற்றி அக்கறைகொள்ளாத நிலைப்பாட்டை காட்டுகிறது. மற்ற நாடுகளில், அவர் பதவி துறக்க வேண்டியிருக்கும் என்று ரஃபிஸி மலேசியாகினியிடம் கூறினார்.
“ஏன் மலேசியாவில் விடுமுரையைக் கழிக்கக்கூடாது?”
மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் போது இது நடந்திருக்கிறது என்று அமானாவின் ஹத்தா ரமலி கூறினார்.
மேலும், விடுமுறைக்காக வெளிநாட்டிற்குச் செல்வதற்கு மாறாக நஜிப்பின் குடும்பம் அவர்களின் விடுமுறையை மலேசியாவில் கழித்திருக்கலாம் என்றாரவர்.
மலேசியாவுக்கு இப்பேர்ப்பட்ட பிரதமர் தேவையா என்று ஹத்தா வினவினார்.
விவேகமான முறையில் செலவிடுவதற்கு பிரதமர் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று டிஎபியின் பெட்டாலிங் ஜெயா உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா கூறினார்.
பாஸ் கட்சியின் பொக்கோக் செனா நாடாளுமன்ற உறுப்பினர் மாபுஸ் ஒமார் பொதுப்பணத்தை இவ்வாறு செலவிடுவதை “பண்பில்லாதது” என்று வர்ணித்தார்.
அரசு விமானங்கள் இவனுடைய விடுமுறைக்கு உபயோகப்படுத்த முடியுமா? அதெப்படி? வேலை நிமித்தமே பயன் படுத்த முடியும் என்று அல்லவோ நான் நினைத்திருந்தேன் !
கொள்ளை அடிப்பவனுக்கு இதெல்லாம் சகஜம் அத்துடன் மக்கள் மாக்கள் ஆகா இருக்கும் பொது அவனுக்கு ஜாலிதான்.
பிரதமரே நன்கொடை கையேந்துவதில் மன்னன் அப்படியிருக்கையில் அரசாங்க ஜெட் விமானத்தைப் பயன்படுத்தியது ஆச்சர்யம் இல்லை.