மலேசியாவில் சீனாவின் முதலீடு குறித்தும் அவ்வல்லரசிடம் பேரம் பேசப்படும் முறை குறித்தும் கேள்வி எழுப்புவதை வைத்து எதிரணி சீனாவுக்கு எதிரி என்று கூறப்படுவதை அமனா எம்பி ஒருவர் மறுக்கிறார்.
எதிரணியைக் களங்கப்படுத்த எண்ணுவோர் இந்த விவகாரத்தைப் போட்டுக் குழப்புகிறார்கள் என கோலா திரெங்கானு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா பஹ்ரின் ஷா கூறினார்.
“நாங்கள் சீனாவுக்கு எதிரிகள் அல்லர். ஆனால், எந்த நாடும் பொருளாதார ஏகபோகம் பெற்று ஆதிக்கம் செலுத்துவதையும் மலேசியா அந்த நாட்டையே அதிகம் நம்பியிருப்பதையும் நாங்கள் விரும்பவில்லை”, என்றவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
எதிரணி சீனா- எதிர்ப்பு உணர்வைப் பரப்பி வருகிறது என்ற ஆளும் கட்சியின் குற்றஞ்சாட்டுக்குப் பதிலளித்த ராஜா பஹ்ரின், ஆட்சியில் இருப்பவர்கள் சீனாவின் வளத்தைக் கொண்டு ஆட்சியில் தொடர்ந்து ஒட்டிக்கொண்டிருக்க விரும்புகிறார்கள், அதற்காக மலேசியாவின் நலன்களைத் தாரை வார்க்கவும் தயாராக இருக்கிறார்கள் என்றார்.
மிக சரியாக சொல்கிறார் அமானா எம்.பி. பணக்காரனும் சரி, பணக்கார நாடும் சரி தன்னை விட ஆற்றல் குறைந்தோரை தன் காலடியில் வைத்துகொள்ளவே விரும்பும்.