பெர்சேயில் கலந்துகொண்ட இரண்டு மாணவர்களை விசாரணைக்கு அழைத்தது யுஎம்எஸ்

pelajarயுனிவர்சிடி   மலேசியா   சாபா(யுஎம்எஸ்),   கடந்த   ஆண்டு   பேர்சே  பேரணியில்   கலந்துகொண்ட  அதன்  மாணவர்கள்  இருவரை    ஜனவரி  25-இல்   கட்டொழுங்கு   விசாரணைக்கு    அழைத்துள்ளது.

சுவாரா  மஹாசிஸ்வா   யுஎம்எஸ்    தலைவர்   முக்மின்   நந்தாங்,   முன்னாள்   “தங்காப்  எம்ஓ1”   கூட்டணி   உறுப்பினர்   நுருல்   அக்கிலா   முகம்மட்    சைனுசி   ஆகியோரே   அவ்விருவருமாவர்.

நுருல்  அக்கிலாவைத்   தொடர்புகொண்டு   பேசியபோது   அவர்   விசாரணைக்கு  வருமாறு   கூறும்   அறிவிக்கை   மட்டும்தான்   வந்தது   என்றும்   விளக்கம்  கேட்கும்   கடிதம்   எதுவும்  தனக்கு   அனுப்பப்படவில்லை   என்றும்   கூறினார்.

நவம்பர்  19  பெர்சே  பேரணியில்   கலந்துகொள்ளத்   தடைவிதிக்கும்     பல்கலைக்கழகச்  சுற்றறிக்கையை    மீறியதாக   தன்மீது   குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக     அவர்   தெரிவித்தார்.

இதனிடையே   பல்கலைக்கழக   விடுமுறையில்   தாவாவ்   சென்றுள்ள   முக்மின்,  தாவாவிலிருந்து    விசாரணைக்காக   பல்கலைக்கழகத்துக்குத்   திரும்பிச்  செல்வது   சந்தேகமே   என்றார்.

“தாவாவ்   கோத்தா  கினாபாலுவிலிருந்து   வெகு   தொலைவில்   உள்ளது,  கிட்டத்தட்ட   500  கிலோ  மீட்டர். பிப்ரவரி  15வரை   பல்கலைக்கழக  விடுமுறை.

“இப்போதுதான்   அறிவிக்கை   கிடைத்தது.  கோத்தா   கினாபாலு   திரும்பிச்    செல்வது   குறித்து   இன்னும்    முடிவு    செய்யவில்லை”,  என்றார்.