நேற்று நெகிரி செம்பிலான், லுக்குட்டில் நடைபெற்ற தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் 60 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் நஜிப் இந்நாட்டு இந்திய சமூகத்தின் பங்களிப்பை வெகுவாகப் புகழ்ந்து பேசினார்.
“வரலாற்று அடிப்படையில், இந்திய சமூகம் அளித்துள்ள பெரும் பங்களிப்பை மறுக்க முடியாது. இந்திய சமூகத்தின் பெரும் பங்களிப்பை நாம் அங்கீகரிக்க வேண்டும்”, என்று நஜிப் வஞ்சனை இல்லாமல் பேசினார்.
தமிழ் இளைஞர் மணி மன்றம் 1956 ஆம் ஆண்டில் தோற்றிவிக்கப்பட்டது. அதன் நோக்கம் தமிழ்மொழி, கலை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை வளர்ச்சியுறச் செய்வதாகும். அம்மன்றத்திற்கு நாடுதழுவிய அளவில் 292 கிளைகள் இருக்கின்றன. அதன் உறுப்பினர்களின் என்ணிக்கை 24,552 என்று கூறப்படுகிறது.
3,000 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் மஇகா தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம், நெகிரி மாநில மந்திரி புசார் முகம்மட் ஹசான், நாடாளுமன்ற செனட் தலைவர் எஸ் எ விக்னேஸ்வரன், மைபிபிபி தலைவர் எம் கேவியஸ், மஇகா முன்னாள் தலைவர் எஸ். சாமிவேலு மற்றும் கெராக்கான் உதவித் தலைவர் எ. கோகிலன் பிள்ளை ஆகியோரும் இருந்தனர்.
இந்நிகழ்ச்சியின் போது, பிரதமர் நஜிப் நெகிரி மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகள் கட்டுவதற்காக ரிம2.18 மில்லியன் பெருமான காசோலையை வழங்கினார். அக்காசோலையை மாநில மந்திரி புசார் முகமட் பெற்றுக்கொண்டார்.
-பெர்னாமா
மூவாயிரம் பேரா (15 பஸ் + 50 கார் ) என்னே உங்கள் கணக்கு
இதில் உணவு சேர்க்கப்படவில்லய்
தமிழ் பள்ளி என்ற செங்கோலை வைத்து தமிழர்களை ஏமாற்றும் பேர்வழிகள் -. தேசிய நிலையில் உள்ள கல்வியை அடையாளம் போட்டு காலந்தள்ளும் அரசியல்வாதிகள் -. தமிழ் மக்களின் வாழ்க்கை தரம் அடிமட்டத்தில் உள்ளது -. நீதிமான்கள் போல் நீலிக்கண்ணீர் வடிக்கும் அதிபுத்திசாலிகள் .-தேர்தல் நெருங்கிவிட்டால் தமிழர்கள் புகழ் பாடும் சில்லறைகள் சில பேர் உள்ளனர் – அடுத்து கோவில்கள் நிதி – காலம் காலமாக கேட்ட புளித்து போன கைங்காரியங்கள் .