எம்ஏசிசி மூன்றாண்டுகளுக்கு புதுக் கருவிகள் வாங்க முடியாது: பட்ஜெட் இடம்தராது

maccபட்ஜெட்   கட்டுப்பாட்டின்   காரணமாக   மலேசிய   ஊழல்தடுப்பு    ஆணையத்தால்   அடுத்த   மூன்றாண்டுகளுக்கு   அதன்   தொழில்நுட்பத்தைத்     தரம்  உயர்த்தவோ   புதுப்புதுக்   கருவிகள்    வாங்கவோ   இயலாது    என    அதன்   தலைமை    ஆணையர்   சுல்கிப்ளி    அஹமட்   கூறினார்.

“மூன்றாண்டுகளுக்கு    புதுத்   தளவாடங்கள்   வாங்குவதற்கான   நிதி   முடக்கப்பட்டுள்ளது.  இதன்  விளைவாக   தொழில்நுட்பத்திலும்   உளவுத்   தகவல்   சேகரிப்பதிலும்   பின்தங்கி    விடலாம்…..”,  என  நேற்றிரவு   அஸ்ட்ரோ  அவானியிடம்    அவர்    தெரிவித்தார்.

பட்ஜெட்  கட்டுப்பாடு    இருந்தாலும்  ஆணையம்   அதன்   கடமையை    நிறைவேற்ற   தவறாது    என்றாரவர்.

இதற்கு  மக்களும்  ஒத்துழைக்க    வேண்டும்.

“இதை   நாங்கள்  மட்டும்    செய்துவிட  முடியாது.  ஊழலைத்   தடுப்பதில்   சமுதாயம்    முழுவதும்  ஈடுபட    வேண்டும்.

“நாங்கள்   எடுக்கும்   நடவடிக்கைகள்மீது   மக்களுக்கு    நம்பிக்கை    வர   வேண்டும்.   நம்பிக்கை    தகவலளிப்பது  உள்பட    ஆதரவாக   மாற   வேண்டும்”,  என்றவர்   கேட்டுக்கொண்டார்.