அமைச்சரின் முன்னாள் உதவியாளர்மீது ஊழல் குற்றச்சாட்டு

sailanஹிஷாமுடின்  உசேன்  போக்குவரத்து   அமைச்சராக    இருந்தபோது    அவருக்குச்    சிறப்பதிகாரியாக   பணியாற்றியவர்மீது    இன்று   ஷா   ஆலம்   செஷன்ஸ்   நீதிமன்றத்தில்    ஊழல்   குற்றம்   சுமத்தப்பட்டது.

2014  பிப்ரவரிவரை   ஹிஷாமுடினிடம்   பணியாற்றிய    சைலான்   ஜவுஹாரி,   2014  ஜனவரியில்   ரிம80,000   கையூட்டு   பெற்றதாகக்  குற்றம்    சுமத்தப்பட்டது.  குற்றச்சாட்டை     அவர்  மறுத்தார்.

இரண்டு   நிறுவனங்களுக்கு    பள்ளிகளைத்   துப்புரவு    செய்யும்  குத்தகையைப்  பெற்றுத்தருவதற்காக   அவர்   அக்குற்றத்தைச்  செய்தாராம்.

சைலான்  மலேசிய  ஊழல்தடுப்பு   ஆணையச்   சட்டம்  2009-இன்கீழ்க்  குற்றம்  சாட்டப்பட்டார்.

அவர்   குற்றவாளி    எனத்   தீர்மானிக்கப்பட்டால்  20  ஆண்டுவரை    சிறையும்   கையூட்டு  பெற்றது   போல்   ஐந்து   மடங்கு  தொகை    அபராதமும்   விதிக்கப்படலாம்.

நீதிபதி   அஸ்மாடி    உசேன்   ரிம30,000  பிணையில்   சைலானை   விடுவித்தார்.  அவர்மீதான   வழக்கு   பிப்ரவரி   13-இல்  விசாரணைக்கு    வருகிறது.