சிறைக் கைதி சந்திரன் முனியாண்டியின் காயங்களுக்கு போலீஸ் காரணமல்ல அவர் வழுக்கி விழுந்ததுதான் காரணம் என தென் செபறாங் பிறை போலீஸ் தலைவர் ஷாபி அப்துல் சமட் தெரிவித்தார்.
அந்த 42-வயது கைதி கழிப்பறையில் விழுந்ததில் தலையில் காயம் பட்டது என்றும் அவருக்குத் தோல் நோய் இருந்ததால் சிறையில் உள்ள மருந்தகத்தில் கால் நகங்கள் அகற்றப்பட்டதுதான் அவை “காணாமல் போனதற்கு”க் காரணம் என்றும் அவர் சொன்னதாக த ஸ்டார் ஆன்லைன் கூறியது.
சிறையில் சந்திரன் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுவதை மறுத்த ஷாபி, அவர் ஒரு மனநோயாளி என்றும் குறிப்பிட்டார்.
சந்திரனின் தாயார் தம் மகன் சிறையில் அடித்துத் துன்புறுத்தப்படுவதாக சனிக்கிழமை போலீசில் புகார் செய்திருந்தார்.
ஆறு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு ஜனவரி 20-இல் சிறைக்குச் சென்றபோது ஆரோக்கியமாக இருந்த மகன், இப்போது செபறாங் பிறை மருத்துவமனை தீவிர கவனிப்புப் பிரிவில் (ஐசியு) தலையில் காயத்துடனும் கால் நகங்கள் இன்றியும் கிடப்பது ஏன் என்று அவர் வினவினார்.
திரைப்படத் துறையினர் நல்லக் கதைகளுக்காக எங்கும் போகவேண்டிய அவசியமில்லை ! நம் காவல் துறையிடம் வருவார்களேயானால் வைரவிழா காணக்கூடிய கதை , வசனம் தந்து உதவுவார்கள் .
ஒரு மன நோயாளி இருக்க வேண்டிய இடம் சிறை அல்லவே!
சந்திரன் முனியாண்டி மனநோயாளி என்பதற்கு மருத்துவர் சான்றிதழ் இருக்கிறதா? அல்லது போலிசே மருத்துவராகவும் பணி புரிகிறதா?
தமிழ் திரைப்படங்களில் வரும் காட்சிகள் இங்கும் உண்மையில் அரங்கேற்றப்படுகின்றது. எல்லாமே காக்காத்திமிரின் கைங்கரியம்– இவன் ஆரம்பித்து வைத்ததின் விளைவு.
ஐயா, யார் மன நோயாளி, தென் செபறாங் பிறை போலீஸ் தலைவர் ஷாபி அப்துல் சமட்டா? சந்திரன் முனியாண்டியா?
BIASLA மலேஷியா
விழுந்தாராம்,தலையில் அடிபட்டுவிட்டதாம், நோயாம் அதனால் நகங்கள் பிடுங்கப்பட்டதாம். என்னே ஒரு பித்தலாட்டம் !! பொய் சொல்வதெல்லாம் இவர்களுக்கு பொங்கல் சாப்பிடுவதைப்போல, அதிலும் ஒருவன் வசமாய் இவர்களிடம் சிக்கிக்கொன்டால் போதும் தன் மனதில் உள்ள வன்மங்கள் அத்தனையையும் மொத்தமாய் அவன் மீது இறக்கி வைத்துவிடும் அற்பர்கள்.