நாஸிர்-மகாதிர் விவாதம்: ஆர்டிஎம் ஒளிபரப்பாது, சாலே கூறுகிறார்

 

nortmtelecastஎதிர்வரும் மார்ச் 25 இல் அனைவராலும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் அமைச்சர் நாஸிர் மற்றும் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் ஆகிய இருவருக்கிடையில் நடைபெற விவாதத்தை ஆர்டிஎம் ஒளிபரப்பாது.

தொடர்புத்துறை மற்றும் பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் அந்த விவாதம் இரு தனிப்பட்டவர்களுக்கிடையிலானது என்றார்.

“என்னைப் பொறுத்தவரையில் அந்த விவாதம் இரு தனிப்பட்டவர்களுக்கிடையிலானது. அதை ஆர்டிஎம்மே முன்னெடுக்கவில்லை.

“அந்த விவாதத்தை நேரடியாக ஒளிபரப்பும் திட்டம் ஏதும் எங்களிடம் இல்லை”, என்று அவர் இன்று கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் கூறினார்.

கடந்த புதன்கிழமை, டிஎபி மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அந்த விவாதத்தை நேரடியாக ஒளிபரப்பும்படி கேட்டுக் கொண்டார்.