பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவின் (பெர்சத்து) துணைத் தலைவர் முக்கிரீஸ் மகாதிரின் சொத்துகள் குறித்து பகிரங்கமாக விவாதிக்க அவரின் முன்னாள் சிறப்பு அதிகாரி ஹரிஸ் செ மாட் சவால் விடுத்துள்ளார்.
முக்ரீஸ் எப்படி பணக்காரர் ஆனார் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள், சொந்த முயற்சியாலா அல்லது வேறு வழியிலா? தமக்குத் தெரிந்த வரையில் அவருக்கு வளமான பின்னணி இல்லை என்று ஹரிஸ் கூறினார்.
“முன்னாள் பிரதமர் ஒருவரின் மகன்களான முக்ரீஸும் அவரது சகோதரர்களும் இவ்வளவு குறுகிய காலத்தில் எப்படி மில்லியனர்களாக முடிந்தது”, என்று அவர் வினவியாதாக உத்துசான் ஓன்லைன் செய்தி கூறுகிறது.
இந்த விவாதத்தை கெடா, ஜெர்லுனில் நடத்துவதற்கான தேதி மற்றும் நேரம் ஆகிவற்றை முக்ரீஸின் முடிவிற்கே விட்டு விடுவதாக ஹரிஸ் கூறினார்.
மலேசியாகினி ஜெர்லுன் நாடாளுமன்ற உறுப்பினரான முக்ரீஸின் கருத்தைப் பெறுவதற்கு அவருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.
நம்ம பிள்ளைங்க மேல் படிப்பிற்காக கெஞ்சி கூத்தாடி கண்டவன் காலில் விழணும் ஆனா இந்த திருட்டு நாதாரி குடும்பம் மக்கள் சொத்தை ஏப்பம் விட்டதும் இல்லாம பதவிகள் வேற! என்னடா ஜனநாயகம் இது? அனுமதி இல்லாம மக்கள் சொத்தை அனுபவித்த காரணத்துக்கு சொத்தை எல்லாம் பறிமுதல் செய்து இவனையும் இவன் அப்பனையும் கம்பி என்ன வைக்கணும்! இது நம்பிக்கை மோசடி குற்றம்!!!
அப்பா அரசாங்கத்துடன் போராடுவதால்.மகனை வம்புக்கு இழுத்து முடக்கப் பார்க்கிறார்கள்,கூட இருந்து தின்னும் பொழுது தெரிய வில்லையா.இப்பொழுதுதான் ஞானோதயம் தோன்றி இருக்கிறது பய புள்ளைக்கு.
நீ கூட இருந்து வாங்கி தின்னுருப்ப…வாழ்த்துக்கள்!ஆனா பெரும்பாலான தமிழன் இந்நாட்டில் உரிமையை இழந்து நிக்க அந்த திருட்டு காக்காதான் காரணம்…இன்னைக்கு நேத்து இல்ல பல வருசமா என் ஆதங்கத்தை இங்க காணலாம்…
அம்னோவின் எதிரி ! ஒருவனும் தப்பிக்க முடியாது ! பாதாளம் வரைக்கும் பாயும் அம்னோ சட்டம் !