பாஸ்: பிகேஆரிடம் கொடுத்த இடங்களைத் திரும்ப எடுத்துக்கொள்வோம்

azminசிலாங்கூர்  மந்திரி   புசார்   முகம்மட்  அஸ்மின்   அலிக்கும்   பாஸுக்குமிடையிலான   சர்ச்சை   மோசமடைந்து   வருகிறது.  கடந்த   பொதுத்  தேர்தலில்   பிகேஆருக்கு  “இரவல்  கொடுக்கப்பட்ட”   அத்தனை   தொகுதிகளையும்      திரும்ப   எடுத்துக்கொள்ளப்போவதாகக்கூட   பாஸ்  தலைவர்    ஒருவர்  மிரட்டியுள்ளார்.

எதிர்வரும்   பாஸ்  கட்சியின்  முக்தாமாரில்   பிகேஆருடன்   உறவுகளைத்   துண்டிக்க   முடிவு   எடுக்கப்பட்டால்   அவ்வாறு   நிகழலாம்    என  பாஸ்  ஆய்வு  மைய  இயக்குனர்   முகம்மட்  ஜுக்டி   மர்சுகி    தெரிவித்ததாக   அம்னோவுக்குச்   சொந்தமான  உத்துசான்  மலேசியா   அறிவித்துள்ளது.

“சிலாங்கூரில்   எல்லா  இடங்களையும்   நாங்கள்   திரும்ப   எடுத்துக்கொள்ளும்   சாத்தியம்   உள்ளதை   மறுக்கவில்லை.

“இத்தருணம்   பிகேஆருடன்  உறவு   இன்னும்   உள்ளது.  முக்தாமார்தான்  முடிவு   செய்ய   வேண்டும்.

“உறவுகளை  வெட்டிக்கொள்வது  என்று  முடிவெடுக்கப்பட்டால்   அது    சிலாங்கூருடன்  நிற்காது.  நாடு  முழுவதும்   நாங்கள்  கொடுத்த   இடங்களைத்   திரும்ப    எடுத்துக்கொள்வோம்”,  என்றவர்   செய்தியாளர்களிடம்   தெரிவித்ததாக   உத்துசான்  கூறியது.