முன்னாள் பிரதமர் மகாதிரும் சுற்றுலா மற்றும் பண்பாட்டு அமைச்சர் நஸ்ரியும் இன்று அவர்கள் இருவரும் விவாதம் நடத்த வேண்டியிருந்த கோலகங்சாரில் சந்தித்தனர்.
இன்று மதியம் நஸ்ரி பெர்சத்து பரிவாரத்தை டாத்தாரான் சயோங் லெம்பாவில் சந்தித்தார். அங்கு அவர் மகாதிருடன் சென்டோல் சுவைத்தார்.
அவர்களுடன் மகாதிரின் துணைவியார் சித்தி ஹாஸ்மா முகமட் அலி மற்றும் மகன் முக்ரீஸும் உடனிருந்தனர். சந்திப்பு மகிழ்ச்சிகரமான இருந்தது.
இன்று நடைபெறவிருந்த விவாதம் ஏப்ரல் 7 இல் ஷா அலாமில் நடைபெறும்.
ஆனால், இந்த விவாதத்திற்கு வேண்டிய போலீஸ் அனுமதிக்கு இதன் ஏற்பாட்டாளர்கள் இன்னும் மனு செய்யவில்லை என்று ஐஜிபி காலிட் அபு பக்கார் தெரிவித்தார்.
இந்த விவாதத்தில் 1எம்டிபி, போரெக்ஸ் மற்றும் பூமிபுத்ரா மலேசியா நிதி ஊழல்கள் ஆகியவை முக்கிய இடம் பெறும்.
சென்டோலும் நாசிலீமாவும் சாப்படத்தான்
இவ்வளவு ஆர்ப்பாட்டமா,பல்டாப்பா?அடுத்தது
பிலாச்சானா?