நஜிப்: சட்டம் 355 ஐ திருத்துவதற்கான மசோதாவை அரசாங்கம் தாக்கல் செய்யாது

 

najibஷரியா நீதிமன்றங்கள் (கிரிமினல் நீதிபரிபாலனம்) சட்டம் அல்லது சட்டம் 355 ஐ திருத்துவதற்கான தனிநபர் மசோதாவை அரசாங்கம் எடுத்துக்கொண்டு தாக்கல் செய்யாது என்று பிஎன் உச்சமன்றம் தீர்மானித்துள்ளது.

“ஆகவே, அந்த மசோதா தொடர்ந்து தனிநபர் மசோதாவாகவே இருக்கும். அது பற்றிய முடிவை அவைத் தலைவர் தீர்மானிப்பார்.

“அவைத் தலைவர் அதனை அனுமதிக்க தீர்மானித்தால் அது தாக்கல் செய்யப்படும்”, என்று பிரதமரும் பிஎன் தலைவருமான நஜிப் இன்று புத்ரா உலக வாணிப மையத்தில் நடந்த அக்கூட்டணியின் உச்சமன்றக் கூட்டத்திற்குப் பின்னர் கூறினார்.