1எம்டிபியிடமிருந்து பணம் பெற்ற பாஸ் கட்சி தலைமைத்துவதற்கு நெருக்கமானவரின் பெயரை வெளியிடப் போவதாக கூறிக்கொண்டிருக்கும் பிகேஆரின் உதவித் தலைவர் ரஃபிஸி ரமலி, அது பற்றி கூடுதலாக ஒரு சிறிய தகவலை வெளியிட்டார்.
பணம் பெற்ற அந்த நபர் பாஸ் கட்சியின் முன்னாள் உயர்மட்ட தலைவர் என்றும் அவர் அம்னோவுக்கும் பாஸுக்கும் பாலமாக இருந்திருக்கிறார் என்று ரஃபிஸி இன்று மலேசியாகினியிடம் கூறினார்..
அம்னோவுக்கும் பாஸுக்கும் இடையில் உறவை ஏற்படுத்தும் முயற்சியில் அந்தத் தலைவர் கொண்டிருந்த ஈடுபாட்டிற்காக பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அசிஸ் நிக் மாட் அவரை பலதடவைகளில் கடிந்து கொண்டார் என்றும் ரஃபிஸி கூறிக்கொண்டார்.
இன்னும் இரகசியம் காக்கும் அவர், முழு விபரத்தையும் இவ்வாரத்தில் வெளிப்படுத்தப் போவதாக கூறினார்.
அவர் வைத்திருக்கும் ஆதாரம் எவ்வளவு கடுமையானது என்று வினவப்பட்ட போது, அது 1எம்டிபி பற்றிய, மூடிமறைக்கப்பட்டுள்ளவை பற்றிய, அனைத்தின் மீதும் மீண்டும் கவனத்தை ஈர்க்கும் என்றாரவர்.