ஜாக்கர்த்தா கவர்னர் பதவிக்கான தேர்தலில் முன்னாள் இந்தோனேசிய கல்வி அமைச்சர் எனியஸ் பாஸ்விடான் 58 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார் என்று அதிகாரப்பூர்வமற்ற கணிப்பு கூறுகிறாது.
அவருக்கு எதிராகப் போட்டியிட்ட பாஸுக்கி டிஜாஹாஜா பூர்ணமா, அவரது சீன செல்லப் பெயர் “அஹோக்”, 42 விழுக்காடு வாக்குகளைப் பெற்றதாக கூறப்படுகிறது.
தேசிய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமான முடிவை மே மாத துவக்கத்தில் வெளியிடும்.
இந்தோனேசிய முஸ்லிம் வேட்பாளர் ஜாக்கர்த்தா தேர்தலில் வெற்றி பெற்றார் என்ற அதிகாரப்பூர்வமற்ற கணிப்பு வெளியாகியவுடனேயே இனவெறியை தூண்டும் பேச்சுக்குரல் ஒலிக்க துவங்கி விட்டது.
இதை காரணம் காட்டி இந்நாட்டில் வாழும் ம…… வந்தேறிகளின் இனவெறியை தூண்டும் பேச்சுக்குரல் ஒலிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.
இந்தோனேசியாவின் முன்னாள் அதிபர் சுகர்னோ புத்திராவின் NUSANTARA INDONESIA வரைப்படத்தில் மலேயா என்ற ஒரு நாடு கிடையாது. அதனால் அவரது அகராதியில் பின்னாளில் உருவான மலேயா என்ற நாட்டில் குடியேறிய ம…ரர், சீனர், இந்தியர் ஆகியோரை வந்தேறிகள் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
அங்கு மதவெறியர்களுக்கு தான் இப்போது காலம்– இது மாறும் என்று நான் நினைக்க வில்லை– காலம் பதில் சொல்லும்–