சமயப் பள்ளி மாணவர் ஒருவர் அடித்துத் துன்புறுத்தப்பட்டதால் இறந்தார் என்று சந்தேகிக்கப்பட்டாலும் மாநில சமய விவகாரத் துறையின் விசாரணையில் அந்தப் பள்ளிமீது எந்தக் குற்றமும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
ஜோகூர் ஆட்சிக்குழுவில் சமய விவகாரங்களுக்குப் பொறுப்பாக உள்ள அப்ட் முத்தலிப் அப்ட் ரகிம், ஜோகூர் இஸ்லாமிய சமய விவகாரத் துறை (ஜேஐஜே) அதன் விசாரணையை முடித்து விட்டிருக்கிறது என்றார்.
“என்றாலும், அண்மைய சம்பவத்தைக் கருத்தில் கொண்டு இனி புதிதாக பணியாளர்களை அதிலும் குறிப்பாக மாணவர் நலன்பேணும் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும்போது புதிய வழிகாட்டி விதிமுறைகள் பின்பற்றப்படும்”, என்றார்.
இதை விட மடத்தனம் வேறு என்ன? இவன்கள் என்றுமே உண்மையை ஒப்புக்கொள்ளவே மாட்டான் கள் — ஈனங்கள்.
உலகிலுள்ள அனைத்து இ…ம் சமய பள்ளிகளில் இது போன்ற சம்பவம் அடிக்கடி நடைபெறுவது சகஜமான ஒன்றுதான்.
இந்நாட்டில் மட்டும் இப்படிபட்ட சம்பவம் அத்தி பூத்தாற்போல் நடைபெறுவதைப்போல அரசாங்கம் காட்டி கொள்கிறது. அவ்வளவுதான்.
ஏதோ அம்னோ அரசியல்வாதி நடத்துகின்ற பள்ளியாக இருக்கலாம்! அதனால் நிச்சயமாக குற்றம் செய்திருக்க வாய்ப்பில்லை!
இந்த சம்பவத்திற்கு பிறகாவது நம் நாட்டு இஸ்லாமிய அன்பர்கள் புத்தி தெளிவார்களாக.
nonymous நீங்கள் எந்த இஸ்லாமிய அன்பர்கள் புத்தி தெளிவார்களாக என்று கூறி இருக்கிறீர்கள் என்பது புரியவில்லை.
தொழுகைக்குப்பின் இடது வலது பக்கமும் திரும்பி பார்ப்போருக்கா ? அல்லது தொழுகைக்குப்பின் கையை இறக்கிவிட்டு நடையை கட்டுவோருக்கா ?
(முன்னது சுன்னி முஸ்லீம் பின்னது ஷியா முஸ்லீம்)
செம்பருத்தி தயவு செய்து இதை போன்ற மதம் சார்ந்த செய்திகளும் ,விவாதங்களும் நமக்கு தேவையில்லாதது , நல்லது சொன்னாலும் நமக்கு வில்லங்கமாகத்தான் முடியும் ! மதம் பிடித்த மத போதகர்களாலும் , சீர் தூக்கி பார்க்க தெரியாத விமர்சகர்களாலும் ! பல பிரிவினைகள் ! இந்திய முஸ்லீம் தாய் ,தந்தையரை , அம்மா, அத்தா , என்று அழைத்து அவர்கள் வீட்டில் சோறு உண்டு ! நோய் என்றால் ! மந்திரித்த தண்ணிர் பருகி வாழ்ந்த நாங்கள் ! இன்றைய இளைய சமுதாயத்தால் அவர்கள் உறவை இழந்து விட்டொம் !