இன்று நள்ளிரவு தொடக்கம் பெட்ரோல் விலை 10 காசு குறைகிறது

petrolpricewednesdayஇன்று நள்ளிரவு தொடக்கம் பெட்ரோல் விலை ஒரு   லீட்டருக்கு 10 காசு குறைகிறது. தொடர்ந்து மூன்றாவது வாரமாக பெட்ரோல் டீசல் விலை இறக்கம் கண்டு வருகிறது.

ரோன்95 மற்றும் ரோன்97 விலை 10 காசு இறக்கங்கண்டு முறையே ரிம2.01 மற்றும் ரிம2.29 என்ற விலையில் விற்கப்படும்.

மற்றபடியாக டீசல் விலையிலும் ஒரு லீட்டருக்கு  6 காசுகள் இறக்கங்கண்டுள்ள நிலையில் ஒரு லீட்டர்  டீசல் ரிம2.02 க்கு விற்கப்படும்.