பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்குக்கு இருதய அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்திருப்பதைப் பாராட்டிய டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங், அவர் விரைவாக உடல் நலம் பெற வாழ்த்தும் தெரிவித்துக் கொண்டார்.
நேற்று தேசிய இருதய சிகிச்சைக் கழக(ஐஜேஎன்)த்தில் ஹாடியின் பழுதடைந்த வால்வைச் சீர்படுத்தும் அறுவைச் சிகிச்சை நடந்தது. அச்சிகிச்சை மூன்று மணி நேரம் நீடித்தது.
அரசியல் தலைவர்களுடன் தாம் கருத்து வேற்பாடு கொண்டிருக்கலாம். ஆனால், தனிப்பட்ட முறையில் யாரையும் வெறுத்ததில்லை என்று கேளாங் பாத்தா எம்பி ஓர் அறிக்கையில் கூறினார்.
இதனிடையே, ஹாடியின் அரசியல் செயலாளர் அஹ்மட் சம்சுரி மொக்தார், ஹாடியின் உடல்நிலை குறித்து இன்று நண்பகல் வாக்கில் அறிக்கை விடுக்கப்படும் என்றார்.