பக்கத்தான் ஹராபானின் பிரதமர் வேட்பாளர்களில் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமும் ஒருவர்தான் என்பதை முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மட் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இன்வோக் அமைப்பு மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் மகாதிர் அவ்வாறு கூறினார். அவ்வாய்வு எதிரணி ஆதரவாளர்களில் பெரும்பாலோர் அன்வார் பிரதமர் ஆவதையே விரும்புகிறார்கள் என்பதைக் காண்பித்தது.
பிரதமர் ஆவதெல்லாம் பிறகுதான், முதலில் 14வது பொதுத் தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதை மகாதிர் வலியுறுத்தினார்.
“வெற்றி பெறாவிட்டால் (எதிரணியிலிருந்து) யாரும் பிரதமராக முடியாது. அதனால், வெற்றி பெறுவது முக்கியம்.
“யார் வேண்டுமானாலும் (பிரதமர்) வேட்பாளராக இருக்கலாம்”, என்றாரவர். நேற்றிரவு பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா ((பெர்சத்து) செராமா ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் மகாதிர் செய்தியாளர்களிடம் பேசினார்.
hidup pakatan harapan