மலேசியர்களை இனம் மற்றும் சமயம் மட்டும் பிளவுபடுத்தவில்லை. சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு தேசியக்கல்வி விவகாரங்களிலும் மக்கள் வேறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.
அனைத்துப் பள்ளிகளையும் இணைத்து ஒரே வகைப்பள்ளி அமைவிற்கு ஆதரவளிப்பீரா என்ற கேள்விக்கு கிடைத்த பதில் பிளவை வெளிப்படுத்தியது.
கடந்த மார்ச்சில், காஜிடாட்டா என்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் ஒற்றுமைக்காக அனைத்துப் பள்ளிகளும் ஒரே வகைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு 41.4 விழுக்காட்டினர் ஆதரவு தெரிவித்தனர்; 47.4 விழுக்காட்டினர் எதிர்ப்பு தெரிவித்தனர். எஞ்சிய 11.3 விழுக்காட்டினர் எவ்வழியும் சரியே என்றனர்.
காஜிடாட்டா வலைத்தளத்தின் தகவல்படி, அது ஒரு வாணிக ஆய்வு நிலையம். அதன் ஆலோசகர் சைட் அராபி சைட் அப்துல்லா இடிட். அவர் யூனிவர்சிட்டி இஸ்லாம் அந்தாராபங்சாவில் ஒரு பேராசியராக இருக்கிறார்.
சுதந்திரத்தின் போது அரசியல் சட்டத்தில் தாய் மொழி பள்ளிகளைப்பற்றி என்ன ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்திருந்தது? இந்த கருத்து கணிப்பு யாரிடம் நடத்தப்பட்டது?
மலாய்க்காரன் களா,சீனர்களா அல்லது இந்தியர்களா? இந்த அரைவேக்காடு யாரிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது என்று கூற வில்லையே? இவனை போன்ற அறிவாளிகளை (?) நம்பினால் இந்த நாடு என்ன ஆகும் என்று சொல்ல தேவை இல்லை–இப்போதே இந்த நிலை .வருங்காலம் சுனாமிதான்.
1MALAYSIA என்பது மலாய் மொழியை தவிர்த்து மற்ற இன மொழிகளை அழிக்கும் கொள்கையுடையுது என்ற சந்தேகம் கொள்வது நியாயமாகவே படுகிறது.
இன்று மொழி அழிப்பு ; நாளை இனம் அழிப்பு என்பது வெகு தூரமில்லை.