மகாதிர் பிரதமராக இருந்த காலத்தில் அவர் இழைத்தாகப் கூறப்படும் தவறுகளுக்காக அவருடன் ஒத்துழைக்கக் கூடாது என்று சிலர் வலியுறுத்தும் வேளையில், இப்போது பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவின் அவைத் தலைவராக இருக்கும் மகாதிருக்கு எதிராக அவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது சரியல்ல என்று விவாதிக்கிறார் டிஎபி ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினரான மு. குலசேகரன்.
முன்பு, துணைப் பிரதமர் அன்வார் இப்ராகிம் எதிர்க்கட்சிக்கு தாவிய போது அவருடன் இணந்து செயல்படுவதற்கு பலர் 1998 ஆண்டில் எதிர்ப்பு தெரிவித்ததை குலா சுட்டிக் காட்டினார்.
நமக்கு வேண்டுமென்றால், மகாதிருடன் ஒத்துழைக்கக்கூடாது என்பதற்கான பல காரணங்களை கூறலாம், நாம் 1998 இல், அன்வாரை ஏற்றுக்கொள்ளகூடாது என்பதற்கு கூறிய பல காரணங்களைப் போல.
ஆனால், அன்வாருடன் ஒத்துழைத்தது குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது என்பதுடன் ஒரு சிறப்பான மலேசியாவுக்கான நம்பிக்கையும் கொடுத்துள்ளது என்றாரவர்.
“இப்போது நமது அரசியல் திட்டம் மலேசியாவைப் பாதுகாக்க வேண்டும் என்பது என்றால், நாம் பரம்பரையாக அம்னோவையும் பாரிசானையும் ஆதரித்து வந்துள்ள மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெற வேண்டும். அரசியல் மாற்றத்திற்கு தேவைப்படும் மலாய் சுனாமியை உருவாக்க உதவக்கூடிய மிக முக்கியமான தனிமனிதர் மகாதிர்.
“ஆகவே, எதிரணி ஆதரவாளர்கள் சரியான தகவலை பரப்புவதற்கு உதவ வேண்டும் என்பதோடு அனைத்து இனங்களும், சாபா மற்றும் சரவாக் மக்கள் உட்பட, அடுத்த பொதுத்தேர்தலில் ஒன்றிணைவதை உறுதிப்படுத்தி மலேசியாவைப் பாதுகாக்க வேண்டும்”, என்று குலா இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறுகிறார்.
பிரதமர் நஜிப்பின் தலைமைத்துவத்தின்கீழ் மலேசியாவுக்கு பிரகாசமான எதிர்காலம் இல்லை. இருந்தும், பின் தலைவர்கள் தொடர்ந்து அவரது புகழைப் பாடிக் கொண்டிருக்கின்றனர்.
மகாதிருக்கு இது தெரியும். அதனால்தான் அவர் அம்னோவிலிருந்து வெளியேறி எதிரணியுடன் சேர்ந்துள்ளார்.
“மலேசியாவை பாதுகாப்பதற்கான ஒரே வழி மக்கள் சக்தி, அதை அடுத்து வரும் பொதுத்தேர்தலில் பெற வேண்டும் என்பதை மகாதிர் நன்குணர்ந்துள்ளார்”, என்றார் குலா.
தன் மகனை அரியணையில் ஏற்றவேண்டும் என்பதற்காகவே இந்த மகாதிமிர் எதிர்க்கட்சிகளின் பக்கம் தலை வைத்து படுக்கிறார் . வேறொன்றுமில்லை. இது இந்த அரைவேக்காடுகளுக்கு நன்றாகவே தெரியும். ஆட்சியை பிடிக்கவேண்டும், பதவி சுகத்தில் அமரவேண்டும் என்றால், இந்த இனக் கொலையாளி மகாதிருடன் சேர்வதை தவிர வேறு வழியில்லை என இந்த எதிர்க்கட்சி பகல் குடிகாரர்களுக்கு நன்றாகவே தெரியும்.
என் முழுமையான ஆதரவு அன்வாருகே!
sinagam அவர்களே உண்மையை சொன்னிர்கள் ! முன்பு ம.இ.கா காரனுங்க மட்டும்தான் நம் சமூகத்தை ஏமாற்றினார்கள், இப்போது எதிர்கட்சிக்காரனுங்களும் நம்மை ஏமாற்ற ஆரம்பித்துவிட்டான் . அதில் குலா மட்டும் விதிவிலக்கா என்ன ? இந்த மகாதீர் அவனுடைய 22 வருட ஆட்சி காலத்தில் மலாய்காரர்களுக்கு மட்டுமே பிரதமமந்திரியாக தன்னை காட்டிக்கொண்டான் . இவன் பதவிக்காலம் முடியும் வரை நமது சமுதாயத்துக்கு ஏதாவது கெடுதல் செய்து கொண்டே இருந்தான் என்பதற்கு ஆதாரமாக 2003 றில் இவன் உக்ரைனுக்கு சென்றுஇருந்தான், அங்குள்ள பிரசித்திபெற்ற கிரிமியா பல்கலைக்கழகம் சென்று பார்த்த போது அங்கு மிக அதிகமாக மலேசிய இந்திய மாணவர்கள் மருத்துவம் படிப்பதை பார்த்து வயிறு எரிந்துபோனான். அத்தனை இந்திய மாணவர்களும் படித்து முடித்து மலேசிய வந்தால் இன அடிப்படையில் இந்திய மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகாரித்துவிடுமே என்ற கெட்ட எண்ணத்தில், இவன் அங்கிருந்து திரும்பி வந்த கையோடு கிரிமியா பல்கலைக்கழகத்தின் மருத்துவ படிப்பை செல்லாது என்று அறிவித்தான் இந்த கயவன். இப்படியாக மலேசிய இந்தியர்களின் முன்னேற்றத்துக்கு முக்கிய அம்சமாக விளங்கிய கல்விப்பாதைகள் அனைத்தையும் அடைத்துப்போட்டான். மலேசிய இந்தியர்களுக்கு எதிராக இவன் செய்த செயல்கள் யாவும் அன்று இரண்டாம் உலகப்போரின் போது கொடுங்கோலன் அடால்ப் ஹிட்லர் யூத இனத்துக்கு எதிராக விதித்த பொருளாதார தடைக்கு ஒப்பாகவே இருந்தது. இன்று சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் குலா போன்றவர்கள் இவனை தோலில் தூக்கிவைத்து குத்தாட்டம் போடுகிறார்கள் வெட்கம் கெட்டவர்கள் !!!