பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் புக்கா புவாசா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறுவது பிறர் எண்ணங்களையோ நம்பிக்கைகளையோ சிறிதும் பொறுத்துக் கொள்ளாத குருட்டுப் பிடிவாதம் என்று நாளைய நல்ல மலேசியாவுக்கான மையம் (சென்பெட்) கூறுகிறது.
பல்லின மலேசியாவில் இதர இன மற்றும் சமயக் கொண்டாட்டங்களில் பங்கேற்பது ஒரு பாரம்பரியம் என்பதைச் சுட்டிக் காட்டிய சென்பெட், இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை மேலும் வளர்ப்பதற்கு பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மலேசியர்களை மற்றவர்களின் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.
“பினாங்கு முதலமைச்சர் “புக்கா புவாசா” நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறுவது அவசியமற்றதோடு அது ஓர் இனத்தின் விஞ்சி இருக்கும் நிலையைக் காட்டுகிறது”, என்று சென்பெட்டின் குழு உறுப்பினர் டெரெக் லோ ஓர் அறிக்கையில் கூறுகிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை, ஜாரிங்கான் முஸ்லிலின் புலாவ் பினாங் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் குவான் எங் “இஸ்லாத்திற்கு எதிரானவர்” என்று குற்றம் சாட்டியதோடு அவர் இஸ்லாத்திற்கு மாறுகிற வரையில் நோன்பு துறக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக்கூடாது என்று வலியுறுத்தியது.
இஸ்லாத்தின் எதிரியான லிம் புக்கா புவாசாவில் கலந்துகொள்ள வேண்டிய தேவை இல்லை என்று ஜாரிங்கான் குழுமத்தின் தலைவர் முகமட் ஹஃபிஸ் நூர்டின் கூறினார்.
ஜாரின்கான் முஸ்லிலின் -இதிலிருந்து இவன்களின் பெருந்தன்மையையும் பகுத்தறிவையும் புரிந்து கொள்ள முடிகிறது. நாதாரிகளை என்ன என்று கூறுவது? தேசிய மசூதிக்கு முஸ்லீம் அல்லாதார் எவ்வளவு நன்கொடை அளித்தனர் என்று இந்த நாதாரிகளுக்கு தெரியுமா? இப்போது மற்றவர்களை ஓரங்கட்டி எல்லாவற்றையும் பிடிங்கிக்கொண்டதினால் இவ்வளவு அகங்காரம்-திமிர்.
ஜாரிங்கான் முஸ்லீமின் ஆர்ப்பாட்டத்தை பார்த்தால் இவர்கள் சன்னி முஸ்லீம்தானா என்ற ஐயம் எழுகிறது.
லிம் குவான் எங், இனங்களின் புனிதத்துவத்தை வளர்க்கிறானாம். மண்ணாங்கட்டி! டி. ஏ,பி. கட்சிக்காக பாடுபட்டு தங்களது சொத்து சுகங்களை இழந்தவர்கள் நிறைய பேர் அக்கட்சியில் இருக்கிறார்கள். குறிப்பாக பினாங்கில், கிருஷ்ணன், அசோகன், ஞானகுரு, கதிர்வேல்,ராஜு, குணாளன் என அடுக்கி கொண்டே போகலாம். பினாங்கு ஆட்சியை பிடித்த பிறகு இந்த இந்தியர்களுக்கு ஏதாவது குத்தகையோ அல்லது கவுன்சிலர் வேலையோ கொடுத்திருக்கக் கூடாதா? அதை விடுத்து, லிம் குவான் எங் பின்னால் சுற்றிய, மாட் சாபுவிற்கு RM 20,000 சம்பளத்தையும் பொறுப்பையும் கொடுத்துள்ளான் இந்த இன வெறியன்.