ஷா ஆலம் போலீஸ் நிலையத்தில் போதைப் பொருள் துறை செயல்பட்டு வந்த ஒற்றை-மாடிக் கட்டிடம் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் மிக மோசமாக எரிந்து போயிற்று.
ஷா ஆலம் தீ அணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குனர் முகம்மட் சானி ஹருல், அதிகாலை மணி 3.43க்கு அபாய அழைப்பு வந்ததும் 21 பணியாளர்கள் மூன்று தீஅணைப்பு வண்டிகளில் விரைந்து சென்றதாகக் கூறினார்.
சம்பவம் நடந்த இடத்தை அவர்கள் சென்றடைந்தபோது கட்டிடத்தின் பெரும்பகுதியில் தீ பரவி கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது.
“தீ அணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுப்படுத்தினார்கள். தீ அணைப்பு நடவடிக்கை காலை 7 மணிக்கு முடிந்தது. நல்ல வேளையாக உயிர்ச் சேதமில்லை”, என அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
விபத்தில் கட்டிடம் 60 விழுக்காடு சேதமடைந்ததாகவும் அவர் சொன்னார்.
சமீபத்தில் மலாக்காவில் MACC மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் எதிரொலி,
ஷா ஆலம் போலீஸ் நிலைய போதைப் பொருள் துறை தீயில் எரிந்து சாம்பலாகும் அளவுக்கு எதிரொலித்திருக்குமோ ?
சாம்பலானது.