மே 27 இல் வெளியிடப்பட்ட த ஸ்டாரின் முதல் பக்கச் செய்தி சம்பந்தப்பட்ட சர்ச்சையின் விளைவாக அந்நாளேடு அதன் முதன்மை ஆசிரியர் லீன்னெ கோவை உள்விசாரணை தீரும் வரையில் இடைநீக்கம் செய்துள்ளது.
அதன் செயல்முறை ஆசிரியர் துரைராஜ் நடேசனும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாளேடு அறிவித்தது.
இடைப்பட்ட காலத்தில், த ஸ்டார் ஊடக குழுமத்தின் நிருவாக இயக்குனர் வோங் சுன் வாய் பதிப்பாசிரியருக்குரிய நடவடிக்கைகளைக் கண்காணிப்பார்.
சம்பந்தப்பட்ட ஆசிரியர்களும் த ஸ்டார் ஊடக குழுமமும் இந்த விவகாரத்தை விசாரிக்கும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு முழு ஒத்துழைப்பை அளிக்கும், குறிப்பாக உள்துறை அமைச்சுக்கும் போலீஸ் படைக்கும் என்று அது தெரிவித்துள்ளது.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார்கள் மலேசிய முஸ்லீம்கள்.