பக்கத்தான் ஹரப்பானுக்கு பொதுவான சின்னம் ஒப்புக்கொள்ளப்பட்டது

 

Pakatanlogoபக்கத்தான் ஹரப்பான் பங்காளித்துவக் கட்சிகள் இறுதியாக ஒரு பொதுச் சின்னத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) மன்றத் தலைவர் டாக்டர் மகாதிர் அறிவித்தார்.

அச்சின்னம் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வெளிப்படுத்தப்படும் என்றாரவர்.

ஹரப்பான் சின்னம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. “ஹரப்பான்” என்ற சொல்லை சிறிய மாற்றத்துடன் பயன்படுத்துவோம் என்று புத்ரா ஜெயாவில் ஹரப்பான் தலைமைத்துவ மன்றத்தின் கூட்டத்திற்கு பின்னர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் மகாதிர் குறினார்.

ஆனால், அக்கூட்டணி ஒரு பொதுவான பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு எதுவும் இன்னும் எடுக்கவில்லை.

இக்கூட்டத்தில் அது பற்றி விவாதிக்கப்படவில்லை என்று மகாதிர் கூறினார்.