தடுப்புக்காவல் கைதி எஸ். பாலமுருகன் மரணம் மீதான பொதுவிசாரணையில் அவரைப் பற்றிய இன மற்றும் இழிவுபடுத்தும் பதிவுகள் போலீஸ் வாட்ஸ்அப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது வெளியாகியுள்ளது.
இந்த வாட்ஸ்அப் குழுமம் வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமையக போலீஸ்காரர்களை உள்ளடக்கியது.
மாவட்ட சிஐடி தலைவர் எஎஸ்பி நோர்சானிஸாம் நோர்டின் அமலாக்க அமைப்புகள் நேர்மை ஆணையத்தின் (இஎஐசி) விசாரணையில் சாட்சியம் அளிக்கும் போது பதிவு செய்யப்பட்ட சில செய்திகள் வாசிக்கப்பட்டன.
பாலமுருகனின் படம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஒரு பதிவை எரிக் பால்சன், பாலமுருகன் குடும்பத்தாரின் வழக்குரைஞர், வாசித்தார். அதில் “Keling ini macam mana, boss? Dia macam nak mampus.”,என்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த விசாரணையில் 28 ஆவது சாட்சியான நோர்சானிஸாம் இம்மாதிரியான பதிவு சரியல்ல என்றும் அது குறித்து தாம் நடவடிக்கை எடுத்ததாகவும் பதில் அளித்தார்.
முன்னதாக, கோப்ரல் முகமட் லோக்மானுல் ஹாகிம் மொக்தார் அளித்த சாட்சியத்தில் தமக்கு பாலமுருகளை 2011 ஆண்டிலிருந்து தெரியும் என்றும் அவர் தமக்கு தகவல் கொடுப்பவர் என்றும் கூறினார்.
இந்த விசாரணையில் பார் கவுன்சில் பிரதிநிதியான ஆர். சிவராசா, லோக்மானுல் ஹாகிம் வாட்ஸ்அப்பில் பாலமுருகனின் உடல்நிலை பற்றிய பதிவில் அவருக்கு ஒரு போத்தல் பீர் கொடுக்க வேண்டும் என்று கேளியாக குறிப்பிட்டிருந்த தகவலை அவர் வெளியிட்டார்.
“kasi dia Carlsberg, confirm okay”,என்று அந்தப் பதிவில் இருந்தது என்றாரவர்.
இதனை செவிமடுத்த இஎஐசி தலைவர் யாக்கோப் முகமட் சாம், செத்துக் கொண்டிருக்கும் உமது நண்பன் மீது உனக்கு அனுதாபம் இல்லையா என்று லோக்மானுலிடம் கேட்டார்.
“ஆம்…ஆனால், எனக்குத் தெரிந்தவரையில், அவர் எப்போதும் குடிப்பார்”, என்று அந்த போலீஸ்காரர் பதில் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, பாலமுருகனின் சகோதரர் தம்மைத் தொடர்பு கொண்டது முதல் தமக்குத் தெரிந்த மற்றும் சம்பந்தப்பட்ட பலவற்றை லோக்மானுல் கூறினார்.
லோமானுல் 26 ஆவது சாட்சியாவார். மொத்தம் 56 சாட்சிகள் சாட்டியமளிக்கவிருக்கின்றனர்.
பாலமுருகன் வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் தடுப்புக்காவல் பகுதியில் பெப்ரவரி 8 இல் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
விசாரணை நாளை தொடர்கிறது.
இந்த கேடுகெட்ட பரதேசி நா… எப்போதுதான் இந்த ‘கெலிங்’ என்று சொல்வதை விடுமோ தெரியவில்லை. இந்த வார்த்தையும் இன துவேசம் தான். சட்டத்தை அமல்படுத்த வேண்டியவர்களே இப்படி கூறியிருப்பது ஒட்டுமொத்த காவல்துறைக்கே இழுக்கு. சட்டம் இவர்கள் மேல் பாயுமா? அல்லது வேடிக்கை பார்த்துகொண்டிருக்குமா?
“ஆம்…ஆனால், எனக்குத் தெரிந்தவரையில், அவர் எப்போதும் குடிப்பார்”, என்று அந்த போலீஸ்காரர் பதில் அளித்தார். அப்படியென்றால் அவர் குடிப்பது இவனுக்கு எப்படித் தெரியும்?குடிக்கும்போது இவனும் உடன் இருந்தானா? 2011-முதலே தெரியும் என்றால் எப்படித் தெரியும்? மாமுல் வசூலிப்பது வழக்கமா?
போலீஸ் படை தலைவரே , புக்கிட் அமன் அம்னோ டிவிஷன் தலைவர் போன்று செயல்பட்டால் , இதுபோன்ற குற்றங்கள் நடைபெறத்தான் செய்யும் !
பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்ப்பது இல்லை . அவன் என்ன வேலை செய்தாலும் அதை ஆதரிப்பது . அதன் விளைவுதான் இது
வேதனையை தரும் சொற்கள் .வேதனையை தரும் செயல் .நம் சமுதாயம் ஒன்றுபட்டு செயல்படும் ஒரு நிலையை நம் நாட்டில் உருவாக்க வேண்டும் .இத்தகைய குற்றங்களை திமிரோடும் தைரியத்துடனும் செய்ப்பவர்கள் சட்டத்தின் மூலம் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் .அரசு இதுபோன்ற ஒவ்வொரு மரணத்திற்கும் ஐந்து லட்சம் வெள்ளி உடனே அந்த குடும்பத்திற்கு இழப்பீடாக எந்தவித வழக்கும் இன்றி கொடுக்க வேண்டும் .
குடியானவன்
உங்களுக்கு இந்து-இந்தியன் என்ற அடையாளம், எனக்கு முஸ்லீம்-இந்தியன் என்ற அடையாளம். நம் இருவருமே எக்காலத்திலும் இந்தியன் அடையாளத்தை என்பதை எந்த கொம்பனாலும் மாற்ற முடியாது.
இந்நாட்டில் இந்துவாக பிறந்து பிறகு இஸ்லாத்திற்கு மாறியவன் நிலை என்ன ?
இந்துவிலிருந்து இஸ்லாத்திற்கு மாறி முஸ்லீம் ஆனாலும் அடையாள அட்டையில் தகப்பனார் பெயருக்கு முன் “BIN” இருந்தாலும், இங்குள்ள மலாய்க்காரர்கள் அவர்களை “கெலிங்” என்றுதானே சொல்கிறார்களே தவிர மலாய்க்காரர்களாக ஏற்று கொள்ள வில்லையே.
அப்படியென்றால் என்ன அர்த்தம் ?
இந்நாட்டில் இந்துவிலிருந்து இஸ்லாத்திற்கு மாறியவர்கள் இந்துவும் அல்ல, இஸ்லாத்திற்கு மாறியவர்கள் மலாய்க்காரர்களும் அல்ல என்பதுதானே அர்த்தம்.
இப்படி இரண்டும் கெட்டங்களாக வாழ்பவர்களுக்குத்தான் இந்த “கெலிங்” என்ற வார்த்தை பொருந்தும்.
“கெலிங்” என்ற வார்த்தையை ஒலிக்க சொல்லி இந்துவிலிருந்து இஸ்லாத்திற்கு மாறியவர்களை மட்டுமின்றி தங்களது மதத்தையும் தாங்களே கேவலபடுத்தி கொள்கிறார்கள்.
“கெலிங்” என்றவுடனேயே நாம் ஆத்திரப்படுவது, அந்த வார்த்தைக்கு உரியவர்கள் நாங்களே என்று நாமே ஏற்று கொள்வதுபோல.
இனி மலாய்க்காரர்கள் “கெலிங்” என்று கூறினால் ஏன்டா உங்கள் மதத்தை நீங்களே கேவலப்படுத்தி கொள்கிறீர்கள் என எடுத்துரைப்போம்.
அப்போதாவது “கெலிங்” என்ற வார்த்தைக்கு உரியவர்கள் இந்தியர்களா ? அல்லது இந்துவிலிருந்து இஸ்லாத்திற்கு மாறிய முஸ்லீம்களா ? என்று தலை மயிரை பிய்த்து கொள்வார்கள் அல்லவா !
கோப்ரல் முகமட் லோக்மானுல் ஹாகிம் மொக்தார் அளித்த சாட்சியத்தில் தமக்கு பாலமுருகளை 2011 ஆண்டிலிருந்து தெரியும் என்றும் அவர் தமக்கு தகவல் கொடுப்பவர் என்றும் கூறினார்
இந்த அரை வேக்காடுகள் எல்லாருமே இப்படித்தான்– மக்கள் அவையிலே எத்தனை முறை அந்த வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது? அதுவும் அமைச்சர் பதவியில் இருந்தவன்களே கூறியபோது அய்யாசாமி என்ன புடிங்கி கொண்டிருந்தான்?
இந்தியனை கில்லிங் என்று சொல்லி கேவலப்படுத்தும் மலாய்க்காரர்கள் , ஏன் நாம் சொரி நாய் என்று அவர்களை சொல்லி கேவலப்படுத்த கூடாது ??? இதை பழக்கத்தில் கொண்டுவரவேண்டும் .
Rahim A.S .S அவர்களே உங்கள் விளக்கம் அருமை. இதனை மலாய் மொழியில் பதிவு செய்யுங்கள்,புரிந்துகொள்ளட்டும்.
நம்ம அறிவுகெட்ட ஜென்மங்களை ‘கெலிங்’ என்று மலாய்க்காரர்கள் சொல்வதில் தப்பே இல்லை. ஏனென்றால், இந்த அறிவுகெட்ட ஜென்மங்கள் மலாய்க்காரனை, மலாய்க்காரன் என்றோ, ‘வலையாங்கட்டி’ என்றோ கூறமாட்டான். ‘நாட்டுக்காரன்’ அல்லது சுருக்கமாக ‘நாட்டான்’ என்று கூறுவான் இந்த ‘காட்டுக்காரன்’ அல்லது ‘காட்டான்’