பக்கத்தான் ஹராபான், அன்வார் இப்ராகிமை அதன் நடப்பில் தலைவராக அறிவிப்பதற்கு ஒருமனதாய் ஒப்புக்கொண்டிருப்பதாக சில வட்டாரங்கள் தெரிவித்தன.
வெள்ளிக்கிழமை ஹராபான் தலைவர் மன்றக் கூட்டத்தில் அப்பரிந்துரையைக் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டதாக மூன்று வெவ்வேறு வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
அந்த வட்டாரங்களில் ஒன்று, பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா(பெர்சத்து)தான் அப்பரிந்துரையை முன்வைத்ததாகக் கூறிற்று.
இதற்குமுன் வந்த தகவல் அன்வார் பெர்சத்துக் கட்சி நிர்வாகத் தலைவருக்கு ஆலோசகராக அமர்த்தப்படுவார் என்று கூறியிருந்ததுடன் ஒப்பிடும்போது இது பெரிய மாற்றமாக தெரிகிறது.
அன்வார்நடப்பியல் தலைவராக தோழமை
கட்சிகள்ஏற்றுக்கொண்டது பாராட்டத்தக்கது!
மாபெரும் ஆற்றல் கொண்ட தேசிய முன்னணியை சிதறு தேங்காயாக ஆக்கிய பெருமை அன்வாரையே சேரும் !!!
அனைத்து மலேசியர்களயும் ஓர் அணியில் இணைக்கும் ,
அணைக்கும் ஓர் உன்னத தலைவராகவே நான் பார்க்கிறேன்.