பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து)-வின் இளைஞர் பகுதி ‘ஒளிப்பதற்கு எதுவுமில்லை’ என்னும் கருத்தரங்கை இம்மாத இறுதிவாக்கில் நடத்தும். இரண்டாவது தடவையாக அது நடத்தும் இக்கருத்தரங்கில் கட்சியின் நிர்வாகத் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட்டும் கலந்து கொள்வார்.
கருத்தரங்கு குறித்து இன்று அறிவித்த பெர்சத்து இளைஞர் தலைவர் சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான், இதில் கலந்துகொள்ளும் துணிச்சல் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு உண்டா என்று சவால் விடுத்தார். கலந்துகொண்டால் நஜிப்புக்கு அவர்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்க இது ஒரு நல்ல வாய்ப்பு என்றாரவர்.
“கருத்தரங்கில் மகாதிர் கலந்துகொள்வதை நாங்கள் உறுதிப்படுத்துவோம்.
“நாங்கள் எப்படி மற்றவர்கள் எங்களுக்குச் சவால் விடும்போது ஒளிவுமறைவின்றியும் வெளிப்படையாகவும் நடந்துகொள்வதாக ஒப்புக்கொள்கிறோமோ அதேபோல், நஜிப்பும் அம்னோ- பிஎன் தலைமையும் ஊடகங்கள் மற்றும் மலேசிய மக்கள் கேட்கும் கடினமான கேள்விகளுக்கு வெளிப்படையாகப் பதிலளிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
“நஜிப் வர மறுத்தாலும் கருத்தரங்கம் நடக்கும். அப்போது மக்கள் தெரிந்துகொள்வார்கள் யார் ஓடி ஒளிகிறார்கள், யார் நேர் பாதையில் செல்பவர்கள் என்பதை”, என்றவர் இன்று பெட்டாலிங் ஜெயாவில் பெர்சத்து தலைமையகத்தில் கூறினார்.
நானா வருவேன் புழுதி நிறைந்த நான் அங்கே வந்தால் எனக்கு ஆப்பு என்பது தெரியுமே அப்படிதான் சொல்லுவான் நமது பிரதம வரவே மாடடான்
ஏதாவது கைலியைக் கட்டிக்கொண்டு வந்தால் கூட போதும்!