பாஸ் கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் அமைத்த கட்சி அமனா. அது டிஎபியின் எடுபிடிக் கட்சி என்று சிலரால் கிண்டல் செய்யப்படுவதுண்டு.
மெகாட் இப்ராகிம் என்ற ஒரு டிவிட்டர் பதிவாளர், அமனாவில் சேர்ந்தால் அது லிம் குவான் எங் மற்றும் லிம் கிட் சியாங் ஆகியோருக்கு விசுவாசமாக இருப்பதாகப் பொருட்படும் என்று டிவிட் செய்திருந்தார்.
குவான் எங் டிஎபியின் தலைமைச் செயலாளர்; அவரது தந்தை கிட் சியாங் கட்சியின் ஆலோசராக கருதப்படுகிறார்.
மெகாட்டிற்கு பதில் அளித்த அமனாவின் தொடர்புத்துறை இயக்குனர் காலிட் சாமாட், விசுவாசம் அல்லாவுக்கும் இறைத்தூதர் முகமட் ஆகியோருக்கு மட்டுதான், தனிப்பட்ட எவருக்கும் இல்லை என்று கூறினார்.
அது இஸ்லாத்தைப் பாதிக்கக்கூடிய ஒன்று என்று அறியப்பட்டால், அது ஓர் உலாமாக இருந்தாலும்கூட அது எதிர்க்கப்பட வேண்டும் என்று சாமாட் மேலும் கூறினார்.
மேற்கூறப்பட்ட டிவிட்டர் செய்தி ஷா அலாம் நாடாளுமன்ற உறுப்பினரான சாமாட், அமனாவின் பங்களிப்பு பற்றியும், அக்கட்சி பாஸுக்கு மாற்றுக் கட்சியாகியுள்ளதா என்பது பற்றியும் பெறும் பல டிவிட்டர் செய்திகளில் ஒன்றாகும்.
இதற்கு முன்னதாக, இன்னொரு டிவிட்டர் செய்தியில் அமனா, பாஸ் கட்சியின் இடத்தைப் பிடித்து விட்டது என்று சாமாட் கூறியிருக்கிறார்.
பாஸ் கட்சியின் தலைவர்களுக்கு விசுவாசமாக இருப்பவர்கள் பாஸ்சில் இருக்கிறார்கள். ஆனால், சிந்திக்கும் ஆற்றலுடையவர்கள் அமனாவுடன் இருக்கிறார்கள் என்று சாமாட் மேலும் கூறினார்.
லிம் கிட சியாங்கிற்கும், அவரது மகனுக்கும் அமானா கட்சி கூஜா தூக்காமலோ, பின் பாட்டு பாடாமல் இருந்தாலோ, பக்காத்தானில் இருந்து அமானா கட்சி ‘கல்தா’ லோ!
என்ன மடையர்கள்? அறிவு வளர்ச்சி அடையா ஈனங்கள்– நம்பிக்கை நாயகனின் விசுவாசம் எப்படி?
முட்டிக்காலுக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடுகிறான்.சம்பந்தமே இல்லாமல் அரசியலில் சமயத்தை இழுக்கிறான் இந்த அரைவேக்காடு.குறுகிய சிந்தனை படைத்த இவன் இந்த நாட்டில் பல இனங்கள் வாழ்கின்றன என்பதனையே மறந்து விட்டான்.
கிட் சியாங்கும், மகனும் இல்லைனா எங்க விசுவாசம் யாருக்கும் இல்லையே!