பக்கத்தான் ஹராபான் நோன்புப் பெருநாளுக்கு முன்னதாக சங்கப் பதிவகத்தில் பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டணி தொடர்பான விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டு வருவதாகவும் அதன் அடையாளச் சின்னத்துக்கும் இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் பார்டி அமனா நெகரா (அமனா) துணைத் தலைவர் சலாஹுடின் ஆயுப் கூறினார்.
இறுதிக்கட்ட ஏற்பாடுகளைச் செய்ய அடுத்த வாரம் கூட்டம் நடத்தப்படும் என்றாரவர்.