பிகேஅர், நேற்றிரவு கூடிய அதன் அரசியல் பிரிவு, டாக்டர் மகாதிர் முகம்மட் பக்கத்தான் ஹராபானின் நிர்வாகத் தலைவராக நியமிக்கப்படுவதற்கு ஒப்புதல் தெரிவித்ததாகக் கூறும் செய்திகளை மறுத்தது.
“அச்செய்தி உண்மையல்ல. அதன் தொடர்பில் ஹராபான் தலைவர் மன்றம் முறையான அறிவிப்பைச் செய்யும்”, என பிகேஆர் தொடர்பு இயக்குனர் பாஹ்மி பாட்சில் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அவ்விவகாரம் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு விவாதங்கள் தொடர்வதாகக் கூறினார். ஆனால், மேல்விவரம் தெரிவிக்க மறுத்து விட்டார்.
மலேசியன் இன்சைட் , சில வட்டாரங்களை மேற்கோள் காண்பித்து, பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா( பெர்சத்து) நிர்வாகத் தலைவர் மகாதிர் முகமட்டை ஹராபான் பூர்வாங்கக் குழு நிர்வாகத் தலைவராகவும் பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலை கூட்டணியின் தலைவராகவும் நியமிக்க பிகேஆர் ஒப்புக்கொண்டிருப்பதாக செய்தி வெளியிட்டிருந்தது.