1எம்டிபி: டிஓஜே குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை

1mdb 1எம்டிபி,   அதிலிருந்து   பணம்    கையாடப்பட்டதாக     அமெரிக்க  நீதித்துறை (டிஓஜே)   சுமத்தும்    குற்றஞ்சாட்டுகளை   நிறுவுவதற்கு    ஆதாரங்கள்   இல்லை   என்று    கூறுகிறது.

“1எம்டிபி   அந்த   சிவில்   வழக்கில்   டிஓஜே   சுமத்தும்   குற்றச்சாட்டுகளுக்கு  ஆதாரமாக   ஆவணச்  சான்றுகளோ   சாட்சிகளின்   வாக்குமூலங்களோ    குறிப்பிடப்படவில்லை   என்பதை   சுட்டிக்காட்ட  விரும்புகிறது”,  என   அந்நிறுவனத்தின்    அறிக்கை   கூறியது.

சொத்துகளைப்   பறிமுதல்    செய்வதற்காக   தொடுக்கப்பட்டுள்ள    அவ்வழக்கு   தனக்கு   எதிராக   தொடுக்கப்பட்டது   அல்ல     என்றும்   டிஓஜே   தன்னை  இதுவரை   தொடர்புகொள்ளவில்லை    என்றும்   அது  கூறிற்று.

வெளிநாட்டு    அதிகாரிகளுக்கு   “அனைத்துலக   நடைமுறைகளுக்கும்        உள்ளூர்    அதிகாரிகளின்   ஆலோசனைகளுக்கும்   ஏற்ப”  ஒத்துழைக்கத்    தயாராக    இருப்பதாகவும்    அது   குறிப்பிட்டது.