சிறுவர் பாலியல் குற்றங்களை விசாரிப்பதற்கென்றே தனி நீதி மன்றம் உருவாக்கப்பட்டிருப்பது அவ்விவகாரத்தில் அரசாங்கம் காட்டும் அக்கறைக்கும் சிறுவர்களுக்கு முழுப் பாதுகாப்பு வழங்க அது பாடுபடுவதற்கும் நல்ல சான்றாகும்.
வியாழக்கிழமை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அந்நீதிமன்றத்தை புத்ரா ஜெயாவில் திறந்து வைக்கிறார்.