இசா சமட் புதிய இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலப் பொதுப் போக்குவரத்து ஆணைய(ஸ்பாட்)த்துக்கு பாஸ் இளைஞர்கள் ‘அனுதாபக் குறிப்பு’ ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
பாஸ் இளைஞர் உதவித் தலைவர் அஹ்மட் பாத்லி ஷாரி ஸ்பாட் தொடர்புத் துறை மேலாளர் ஹஸிமின் சுலைமானிடம் அக்குறிப்பை வழங்கினார்.
அக்குறிப்பை வழங்கியபோது இசா ஸ்பாட்டுக்குத் தலைவராவதை எண்ணி உண்மையிலேயே மனம் வருந்தியதாக அஹ்மட் பாத்லி கூறினார்.
ஏனென்றால், இதற்குமுன் பெல்டா குளோபல் வெண்ட்சர்ஸ் பெர்ஹாட் (எப்ஜிவி) தலைவராக இருந்தபோது அங்கு நிறைய பிரச்னைகளை உருவாக்கியவர் இசா என்றாரவர்.
“அதுதான் எங்கள் அனுதாபத்தை ஸ்பாட்டுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்பினோம்”, என்று அஹ்மட் பாத்லி கூறினார்.
உங்கள் அனுதாபத்தை அவர் வாழ்த்தாக நினைத்து ஏற்றுக் கொள்ளுவார்!