இப்போது 1எம்டிபியைத் தற்காக்கும் மாவீரர் ஹாடி, அம்னோ அல்ல என்கிறார் கிட் சியாங்

 

HadigreaterthanUmnoindefending 1mdbபாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் 1எம்டிபி ஊழலைத் தற்காத்திருப்பது குறித்து டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் வருத்தம் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ஆண்டின் புனித மாதம் பல வருந்தத்தக்க சம்பவங்களைக் கண்டுள்ளதாக கூறுகிறார். அதில் இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) அமெரிக்க நீதித்துறைக்கு (டிஒஜே) விடுத்துள்ள மிரட்டலும் அடங்கும்.

ஆனால், மலேசியாவில் இந்த ரமதான் மாதத்தில் மிக மறக்கமுடியாத சம்பவம் பாஸ் தலைவர் ஹாடி அவாங் அடைந்திருக்கும் உருமாற்றம். அவர் இப்போது பிரதமர் நஜிப்பையும் அவரது 1எம்டிபி ஊழலையும் தற்காத்து போராடுவதில் அம்னோவிலுள்ள அனைவரையும் விஞ்சிய வீரராகத் திகழ்கிறார் என்று கிட் சியாங் மேலும் கூறுகிறார்.