பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடமிருந்து நேரடியாக பணம் பெற்றதாகவும் அப்பணம் கையாடப்பட்ட பொதுப்பணம் என்று கூறப்படுவதையும் மஇகா மறுத்தது.
“என்னைப் பொருத்தவரை அது பிஎன் பணம்”, என்று மஇகா தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கூறினார். அது வழக்கமாக நடப்பதுதான் என்றும் அவர் சொன்னார்.
சுப்ரமனியம் இன்று சிலாங்கூர், செராசில் செய்தியாளர்களிடம் பேசினார்.
தொடர்ந்து பல இரகசியங்களை அம்பலப்படுத்திவரும் சரவாக் ரிப்போர்ட், மஇகா 2012க்கும் 2014க்குக்குமிடையில் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளிலிருந்து சுமார் ரிம19மில்லியன் பெற்றுக்கொண்டிருப்பதாகக் கூறியிருந்தது.
கறைபடிந்த பணத்தைப் பெற்ற கைதான் தே.மு. வின் கைகள்.
தேனீ அவர்களே பணத்தை கரை படிய வைத்ததே இவன்கள் தான் — இதுதான் அன்றிலிருந்து இன்றுவரை–மக்களின் வரிப்பணம் -வேறு ?