யாங் டி பெர்துவான் ஆகோங்கை அவமானப்படுத்திய வலைமகன் ஒருவனை போலீசார் கைது செய்திருப்பதாக போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் இன்று கூறினார்.
“பேரரசரை அவமானப்படுத்திய ‘Catt Ginger’-ரை வெற்றிகரமாகக் கைது செய்த குற்றவியல் புலனாய்வுப் பிரிவுக்குப் பாராட்டுகள்”, என்றவர் டிவிட் செய்திருந்தார்.
ஆனால், அந்த வலைமகன் இழைத்த குற்றம் என்னவென்பதை காலிட் கூறவில்லை.
அந்த ஆசாமி பேரரசரை இழிவுபடுத்திய விவகாரத்தை வலைமகன்கள் பலர் கவனப்படுத்திய பின்னர் விழிப்படைந்த போலீசார் அவனைக் கைது செய்தனர். அவனது செயலைப் பலரும் கண்டித்திருந்தனர்.
அவன் பேரரசரின் படத்தில் பன்றியின் மூக்கை ஒட்டவைத்து பதிவிட்டிருந்ததாக சிலர் கூறினர்.
மலேசியாகினியால் அதை உறுதிப்படுத்திக்கொள்ள இயலவில்லை. Catt Ginger-இன் முகநூல் பக்கம் இப்போது இல்லை.
மலேசியா ஒரு ஜனநாயக நாடு என உலகம் பூராவும் டமாரம் அடிக்கிறோம். ஆனால், இங்கே சுயமாக கருத்துக் சொல்ல இயலவில்லை.
இதுதான் மிக முக்கியம். எலிசபெத்தையே கிண்டலடித்தாலும் அது நகைச்சுவையாகவே எடுத்துக்கொள்ளப்படும். ஆனால் இந்த மூன்றாம் உலகத்தில் தான் அது மிகப்பெரிய விஷயமாக ஆக்கிவிடுகிறான்கள்–