டாக்டர் மகாதிர் முகம்மட் அன்னிய செலாவணி(ஃபோரெக்ஸ்) ஊழல் விவகாரத்தை விசாரிக்க அரச விசாரணை ஆணையம் (ஆர்சிஐ) அமைக்கப்படுவது குறித்து தாம் அஞ்சுவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருப்பதை எள்ளி நகையாடினார்.
“நோன்புப் பெருநாளின்போது நஜிப்புக்கு செலாமாட் ஹரி ராயா வாழ்த்துச் சொன்னேன். ஆனால், அவர் என்னைக் கைது செய்வதில் குறியாய் இருக்கிறார்.
“அதனால் என்ன, பரவாயில்லை. அவரிடம் அதிகாரம் இருக்கிறது. தங்காப் லா(கைது செய்யுங்கள்)”, என நேற்றிரவு மலாக்காவில் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) திறந்த இல்ல உபசரிப்பில் மகாதிர் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஒரு நிகழ்வில் பேசிய நஜிப், ஃபோரெக்ஸ் ஆர்சிஐ தம்மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு வழிகோலும் என மகாதிர் அஞ்சுவதாகக் கூறினார்.
அதனால்தான் மகாதிர் தமக்கெதிராக தற்போது சிறையில் உள்ள முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராகிம் சாட்சியமளிப்பதைத் தவிர்க்க அவருடன் நெருக்கமாக இருக்கிறார் என்று பிரதமர் கூறினார்.
ஆனால், மகாதிர் அதை அபத்தம் என்று நிராகரித்தார்.
“நான் அன்வாருடன் ஒத்துழைப்பது என் தனிப்பட்ட பிரச்னைகளுக்காக அல்ல.
“நான் அன்வாருடன் ஏன் ஒத்துழைக்கிறேன் என்றால் இருவரின் நோக்கமும் ஒன்று- அதாவது நஜிப்பின் கொடூர அரசாங்கத்தைக் கவிழ்ப்பது”, என்று அவர் சொன்னதும் சுற்றி இருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
மூன்றாம் உலக மடையர்களுக்கு கைது செய்ய மட்டும் தான் தெரியும்–உன்னையும் சேர்த்துதாண்டா காக்காத்திமிர். உண்மையான ஆட்சி தரமான ஆட்சி என்பது உன்னுடைய செயல் பாட்டில் இருந்திருந்தால் இந்த நாதாரி கொஞ்சமாவது சிந்திப்பான். நல்ல கல்வித்தரம் இருந்தால் மலேசியர்கள் சிந்திக்கும் திறனுடன் செயல்படுவர். பகுத்தறிவு காணாமலேயே போய்விட்டது.
மடியிலே கனம் இல்லாதவனுக்கு வழியிலே எதற்கு பயம்..?
விரைவில் கைது செய்வோமடா! அஞ்சடி நீ சிறையில் இருந்தால்தான் உனக்கு புத்தி வரும்.