புத்ரா ஜெயாவைக் கைப்பற்றிய முதல் 100 நாள்களுக்குள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பட்டியலை ஹரப்பான் இன்று வெளியிட்டது.
ஹரப்பான் கூட்டணியின் கூட்டறிக்கையை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதன் அவைத்தலைவர் மகாதிர் முகமட் வாசித்தார். அத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளவற்றில் பொருள்கள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) அமலாக்கம் இரத்து செய்யப்படுவது ஒன்றாகும்.
ஹரப்பான் செயல்படுத்தவிருக்கும் திட்டங்களின் பட்டியல்:
– பெட்ரோல் விலையை நிலைப்படுத்துதல்
– மக்களின் சுமைகளைக் குறைக்கும் முயற்சிகளில் கவனம் செலுத்துதல்
– முக்கியமான அமைப்புகளை முழுமையாக சீர்திருத்துவதற்கான செயல்முறைகளைத் தொடங்குதல்
– ஊழலை வேர் அறுத்தல்
– 1எம்டிபி ஊழலை விசாரிக்க அரச விசாரணை ஆணையம் அமைத்தல்
– பெல்டா மறுசீரமைப்பு செய்தல்.
இதனுடன், நஜிப் அப்துல் ரசாக்கின் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதும் அதன் ஈடுபாடுகளில் அடங்கும் என்றாரவர்.
இந்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் பெட்டாலிங் ஜெயா பிகேஆர் தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் செய்யப்பட்டது.
பிரதமர் பதவிக்கு உச்ச வரம்பு
ஹரப்பான் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளான டிஎபி, பிகேஆர், அமனா நெகாரா மற்றும் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா ஆகியவை பிரதமர் பதவிக்கு இரண்டு தவணை உச்ச வரம்பை அமல்படுத்தும்.
மக்களின் நலன்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தும் தற்போதைய அரசாங்கத்தின் சட்ட மீறல்கள் இரத்து செய்யப்படும் அல்லது திருத்தப்படும் என்று கூறினர்.
அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்து அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கைவிடவும் அவர்கள் ஒப்புக்கொண்டதோடு அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கான சட்ட திருத்தம் செய்யப்படும் என்றும் கூறினர்.
சின்னம் முடிவு செய்யப்பட்டது
ஹரப்பானின் சின்னம் மற்றும் அதன் கட்டமைப்பு ஆகியவை குறித்தும் நீண்டகால பேச்சுவார்த்தைக்குப் பின்னர் முடிவு செய்யப்பட்டது.
பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் ஹரப்பான் கூட்டணையின் நடப்பில் தலைவராக அறிவிக்கப்பட்டார். அதே வேளையில், பிகேஆர் தலைவர் வான் அசிஸா வான் இஸ்மாயில் ஹரப்பான் கூட்டணி தலைவராக நியமிக்கப்பட்டார்.
நம்பிக்கை நாயகன் அவ்வளவு
சுலபமாக விட்டுக்கொடுக்கமாட்டான். எல்லா தில்லு முள்ளும் பிரமாதமாக நடக்கும். எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும் யார் அரியணை ஏறுவார் என்று.
பிரதமர்பதவிக்குஇரண்டுதடவைஉச்ச
வரம்பைஅமல்படுத்தும்மகாதீரின்கள்ளநரி
தந்திரம்,உத்தமப்புத்திரன்முக்கீரிசை
நுலைத்துவிடலாம்?
GST – யை அகற்றினால் கோடி கும்பிடு! மக்கள் செலவினங்களைக் குறைக்க வழியைக் காணுங்கள்.
குடியரசு ஆட்சிக்கு நீதி மன்றமே பாதுகாப்பு. அதனைச் சரி செய்ய ஆவண கொள்ளுங்கள்.
இன வாரியான கொள்கைகளைப் படிப்படியாகக் குறைத்து மலேசிய மக்கள் என்றதன் அடிப்படையில் கொள்கைகளை வகுத்து ஆட்சி செய்யுங்கள். இந்த நாடு உருப்படும்.
ஊழலை வேரறுத்தல் என்பது முடியாத காரியம். மேலிருந்து கீழ் வரை ஊழலைக் குறைக்க தகுந்த நடவடிக்கை எடுங்கள். இது தனியார் துறைக்கும் சேர்த்துச் சொன்னது.
துன் மகாதீர் இருக்கும் காலத்திலேயே நல்லதைச் செய்தால் நல்ல பெயராவது மிஞ்சும்.
நலிந்து போயிருக்கும் பொருளாதாரத்தை மேம்படுத்த தக்க ஆலோசனைகளை முன் வையுங்கள்.
ஒரு பயலையும் நம்ப முடியவில்லை! இருக்கிற பிசாசே போதும் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது!