ஷரியா குற்றங்களுக்கு பொது இடத்தில் பிரம்படி கொடுக்க வசை செய்யும் சட்ட திருத்ததை கிளந்தான் சட்டமன்றம் ஏற்றுக்கொண்டிருப்பதை கண்டிக்கக்கூடாது, ஏனென்றால் இந்நாட்டில் இது ஒன்றும் புதிதல்ல. இது சாபாவில் ஒரு தடவை அமலாக்கப்பட்டுள்ளது என்று பிரதமர்துறை அமைச்சர் ஜமில்கிர் பஹாரோம் கூறுகிறார்.
இத்தண்டனை ஷரியா குற்றங்கள் புரிந்த முஸ்லிம்கள் மீது மட்டுமே விதிக்கப்படும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றாரவர்.
‘இதை ஒரு பிரச்சனையாக்காதீர்கள்…ஷரியா சட்டத்தின்கீழ் பொது இடத்தில் பிரம்படி கொடுப்பது சிறைச்சாலைக்கு வெளியில் தாவாவில் (சாபா) கொடுக்கப்பட்டது. பலருக்குத் தெரியாது அந்த தண்டனை ஷரியா சட்டத்தின் அடிப்படையில் அளிக்கப்பட்டது மற்றும் அது முஸ்லிம்களை மட்டுமே பாதிக்கிறது”, என்று அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறினார்.
ஜெராய் அம்னோ தொகுதி தலைவருமான ஜமில், சிறைச்சாலைக்குள் கொடுக்கப்படும் பிரம்படியும் பொது இடத்தில் என்று கருதப்படுகிறது, ஏனென்றால் அச்சொல் இஸ்லாத்தில் இரண்டுக்கு மேற்பட்டவர்களைக் குறிப்பிடுகிறது என்றாரவர்.
சிறைச்சாலையில், இரண்டிற்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள், கண்காணிப்பதற்கு மருத்துவர், அமல்படுத்தும் சமய அதிகாரி, கூடவே இருக்கும் அதிகாரிகளும் மற்றவர்களும் உட்பட, இது நிச்சயமாக இரண்டுக்கும் கூடுதலான மக்கள் ஆகும்”, என்று அவர் விளக்கம் அளித்தார்.
பெரிய சாதனை தான் டா. சுத்த காட்டுமிராண்டிகள் தானே உன்னைப்போன்றவர்கள்– இந்த 21 வது நூற்றாண்டு கூட இவர்களின் அறிவுக்கண்ணை திறக்க வில்லை. ஈனம்.